வீட்டு பாத்ரூமில் 1 கைப்பிடி கல் உப்பை வைத்தால் வாஸ்துப்படி என்ன பலன் தெரியுமா..?

Advertisement

கல் உப்பு பலன்கள்

நம்முடைய வீடுகளில் சமைக்கும் சாப்பாட்டின் சுவையினை அதிகரிக்கச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் கல் உப்பிற்கு ஆன்மீகத்தில் நிறைய பலன்கள் இருக்கிறது. அந்த வகையில் கல் உப்பினை மஹாலக்ஷ்மியின் அம்சம் பொருந்தியது என்று கூறலாம். பெரும்பாலும் இந்த கல் உப்பினை பண வரவு அதிகரிக்க, கடன் பிரச்சனை தீர மற்றும் செல்வ செழிப்பு உண்டாக என இதுபோன்ற பரிகாரங்களை செய்து பார்த்து இருப்போம். அந்த வகையில் ஆன்மீகத்தில் குளியலறையில் கல் உப்பினை வைப்பது மிகவும் நல்லது என்று கூறுவார்கள். ஆனால் அதற்கான பலன்கள் என்ன என்று பெரும்பாலான நபர்களுக்கு தெரிவது இல்லை. அதனால் இன்று வீட்டு பாத்ரூமில் கல் உப்பினை வைப்பதனால் வாஸ்துப்படி என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ள போகிறோம்.

வீட்டில் இதை எல்லாம் செய்யாமல் இருந்தாலே போதும் உங்கள் கடன் பிரச்சனை தீர்ந்து செல்வம் பெருகும்.

கல் உப்பு பலன்கள்:

கல் உப்பினை நமது வீட்டு குளியலறையில் ஒரு கண்ணடி பவுலில் வைப்பதன் மூலம் வாஸ்துப்படி நிறைய பலன்கள் நமக்கு கிடைக்கிறது. அவை என்னென்ன என்று கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பணவரவு அதிகரிக்க:

kal uppu palangal

முதலில் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக்கொண்டு அதில் கல் உப்பு மற்றும் தண்ணீரை முழுவதுமாக நிரப்பி குளியலறையில் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும்.

இவ்வாறு தென்மேற்கு மூலையில் வைப்பதன் மூலம் வீட்டின் பணவரவு பல மடங்கு அதிகரிக்கும் என்று வாஸ்துப்படி கூறப்படுகிறது. எனவே வாரம் ஒருமுறை இந்த உப்பினை மாற்ற வேண்டும்.

எதிர்மறை சக்தி நீங்க:

கல் உப்பு பலன்கள்

ஒரு கண்ணாடி கிண்ணத்தில் கல் உப்பினை நிரப்பி அதனை குளியலறையில் வைத்து விட வேண்டும். மேலும் அந்த கல் உப்பு பிறருடைய கண்ணில் படாதவாறும், கறையாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய முறையில் கல் உப்பினை குளியலறையில் வைப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தி அனைத்தும் நீங்கி, பணக் கஷ்டம் இல்லாமல் இருக்கலாம்.

கஷ்டங்கள் தீர:

கஷ்டம் தீர

அதேபோல் கல் உப்பினை சனி மற்றும் செவ்வாய் கிழமையில் குளியலறையில் ஒரு பவுலில் வைப்பதன் மூலம் சனி பகவானை அமைதிப்படுத்தவும், ஹனுமனின் நேர்மறை ஆற்றல் நமது வீட்டிற்கு கிடைக்கவும் உதவியாக இருக்கும் என்று சாஸ்துப்படி கூறப்படுகிறது.

ஆகவே மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் கல் உப்பினை குளியலறையில் வைப்பதன் மூலம் வீட்டிற்கு வரும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி பண வரவு மற்றும் செல்வ செழிப்பு ஏற்படும் என்று வாஸ்துப்படி கூறப்படுகிறது.

மேலும் வழக்கமாக நீங்கள் செய்யும் முயற்சினையும் பண வரவிற்காக செய்ய வேண்டும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement