நினைத்த காரியம் 10 நாட்களில் நிறைவேற ஒரு கைப்பிடி கல் உப்பு போதும்..! Kal Uppu Palangal..!
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. நமது வீட்டில் கண் திருஷ்டி இல்லாமல் அதிர்ஷ்ட்டமான ஒரு வாழ்க்கையை வாழவேண்டும் என்கின்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதுபோன்ற ஆசைகள் இருக்கின்றவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் அதிர்ஷ்டகரமான மற்றும் லட்சதீபதியாக கூடிய அனைத்து விஷயங்களையும் நிறைவேற்ற கூடிய சக்தி கல் உப்பிற்கு இருக்கிறது, ஆக நீங்கள் நினைக்ககூடிய காரியத்தை 10 நாட்களுக்கு நிறைவேற்ற ஒரு கைப்பிடி கல் உப்பு இப்போதும். அதனை வைத்து ஒரு அருமையான பரிகாரம் செய்யும் முறையை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போறோம். சரி வாங்க அது என்ன பரிகாரம் அதனை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
கல் உப்பு பரிகாரம்:
பொதுவாக கல் உப்புல் பல பலவகையான பரிகாரங்கள் செய்யப்படுகிறது.உப்பானது 365 டிகிரியில் அதனை சுற்றி வளைச்சி இருக்கும் எதிர்மறை எண்ணங்களை எல்லாம் எடுத்துக்கொள்ளும் அதனால் ஒரு அதிர்ஷ்டாகரமான வாழ்கை கிடைக்கும்.
இத்தகைய உப்பை கண்ணாடி டம்ளரிலோ, செம்பு டம்ளரிலோ எதாவது ஒரு டம்ளரில் வைத்து பயன்படுத்தலாம். இருப்பினும் கண்ணாடி டம்ளரில் உப்பை வைத்து பரிகாரம் செய்வது நல்ல சக்திவாய்ந்ததாக இருக்கும்.
உப்பை கண்ணாடி டம்ளரில் போட்டு எந்த இடத்தில் வைத்தாலும் அது அங்கு இருக்கும் எதிர்மறை எண்ணங்களை அளித்து நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் இந்த பறவை கூடு கட்டினால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்..
இருப்பினும் இந்த உப்பை நாம் பூஜை அறையில் மட்டும் வைத்து பரிகாரம் செய்ய கூடாது. ஏன் என்றால் இவ்வாறு செய்வது நல்ல எண்ணங்களை கூட நிறுத்திவிடும் என்று சொல்ல படுகிறது ஆக உப்பை சாமி அறையில் மட்டும் வைத்து வழிபட கூடாது. வேண்டுமென்றால் கடவுளுக்காக பூஜை செய்வதற்காக நாம் உப்பை பயன்படுத்தலாம்.
வேண்டுமென்றால் இந்த உப்பை தூங்கும் அறை, சமையலறை, ஹால் போன்ற இடங்களில் வைத்து பரிகாரம் செய்யலாம் மற்றபடி பூஜை அறையில் மட்டும் வைத்து பரிகாரம் செய்ய கூடாது.
பரிகாரம் செய்யும் முறை:
உப்பை வைக்கக்கூடிய அந்த கண்ணாடி டம்ளரை எடுத்துக்கொண்டு அந்த டம்ளரில் உப்பை நம்பிக்கையுடன் வேண்டுவதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும்.
அதாவது உங்கள் வீட்டில் பணம் புழக்கம் என்பது அதிகமாகவே இருந்துகொண்டே இருக்கும். பணம் கஷ்டம் என்பது இருக்காது. பணம் வரவு அதிகரிக்கும் என்று சொல்ராங்க.
ஆக இந்த உப்பை கண்ணாடி பாத்திரத்தில் கொட்டி உங்கள் வீட்டில் உள்ள பெட் ரூம், ஹால், கிட்சன் போன்ற இடத்தில் வைத்து 15 நாட்களுக்கு ஒரு முறை புதிய உப்பை மாற்றுவதன் மூலம் நல்ல பலன்கள் உண்டாகும்.
இந்த உப்பு பரிகாரத்தை இன்னொரு முறையிலும் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது கண்ணாடியில் செய்யப்பட்ட ஜாடி அல்லது பீங்கானில் செய்யப்பட்ட ஜாடி ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
அந்த ஜாடிக்குள் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருமே ஒவ்வொரு கைப்பிடி கல் உப்பை போடவும். அதன் பிறகு விரலி மஞ்சளை உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் அந்த உப்பு ஜாடியில் போடவும்.
அடுத்ததாக நாம் அவற்றில் போட போகும் மிக முக்கியமான பொருள் வசம்பு. அந்த வசம்பில் எந்த ஒரு ஓட்டைகளும் இல்லாமல் நல்ல ஒரு வசம்பகா இருக்க வேண்டும். அந்த வசம்பையும் வீட்டில் அனைவரும் அந்த உப்பு ஜாடியில் போடவும்.
இவ்வாறு செய்வதினால் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்றால் அதிர்ஷ்டங்கள் உண்டாகும், பணம் புழக்கமானது அதிகரிக்கும், வீட்டில் நிதி நிலை மற்றும் வருமானம் அதிகரிக்கும், இதனால் நீங்கள் செல்வ வளமுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த கிழமையில் மட்டும் நகம் வெட்டாதீங்க..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |