7 கல் உப்பு கேட்டது கிடைக்க வைக்கும்..! இதை மட்டும் செய்யுங்கள்..!

Kal Uppu Pariharam Seivathu Eppadi

கல் உப்பு கேட்டது கிடைக்கும் அதிசயம் – Kal Uppu Pariharam Seivathu Eppadi

பொதுவாக நம் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்துகொண்டு தான் இருக்கும்.  இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்றால் அது நமக்கு தெரியாது. அந்த அளவிற்கு வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்துகொண்டு தான் இருக்கும். சரி இதற்கு தீர்வு என்னவென்றால் ஒவ்வொரு நாளும் நம்முடைய தேவையை நிறைவேற்ற சொல்லி கடவுளிடம் பிராத்தனை செய்வோம். அதேபோல் நம்முடைய வீட்டில் பரிகாரம் செய்யலாம். அதனை செய்தால் வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீரும், நினைத்து நடக்கும் அதேபோல் கேட்டது கிடைக்கும். அது என்ன பரிகாரம என்று இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Kal Uppu Pariharam Seivathu Eppadi:

Kal Uppu Pariharam Seivathu Eppadi

கல் உப்பு என்பது சமையலுக்கு மட்டுமல்லாமல் அதனை தெய்வீக பொருளாக பார்ப்பார்கள். உப்பை செல்வத்தின் கடவுளாக லட்சமி தேவியுடன் ஒப்பிடுவார்கள்.  ஏனென்றால் லட்சமி தேவியும் கடலில் தோன்றியவர். தான் உப்பும் கடலில் தோன்றியதால் உப்பையும் தெய்வீக பொருளாக பார்க்கிறார்கள்.

அதேபோல் கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்குகிறது என்று நம்பிக்கை.  இன்றும் சில வீட்டில் திஷ்டி கழிப்பதற்கு உப்பு சுற்றி போடுவதை பலவிதமாக பார்த்து வருகிறோம்.

உப்புக்கு நேர்மறை ஆற்றல் அதிகம். அதேபோல் துஷ்டசக்திகளை விரட்டும் சக்தி கொண்டது. அதேபோல் புதிய வீடு என்றால் அதற்கு பூஜை அறையில் உப்பை தான் முதலில் வைப்பார்கள். அதனால் உப்பு மிகவும் மகத்துவதமானது ஆகும். ஆகவே  இந்த பதிவில் நன்மை அளிக்கும் கல் உப்பு பரிகாரத்தை பார்க்கலாம் வாங்க..!

ஒரு கைப்பிடி கல் உப்பு போதும் 10 நாட்களில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற

பரிகாரம் – 1

ஒரு டம்ளரில் தண்ணீர் விட்டு அதில் 1 சிட்டிகை அளவு உப்பு சேர்த்து வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்தால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் நீங்கி நன்மை உண்டாகும். தினமும் அந்த தண்ணீரை மாற்றி செய்யவும். பழைய தண்ணீரை குளியல் அறை அல்லது பாத்திரம் துலக்கும் போது அதில் ஊற்றிவிடவும்.

பரிகாரம் – 2

கணவன் மனைவி பிரச்சனை தீர என்ன பரிகாரம் என்றால், ஒரு டம்ளரில் 1 சிட்டிகை அளவு உப்பு சேர்த்து படுக்கை அறையில் ஏதாவது ஒரு மூலையில் வைத்தால் அவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

பரிகாரம் – 3

இந்த பரிகாரம் குளியல் அரை கல் உப்பு பரிகாரம் ஆகும். ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பி குளியல் அறையில் நீர்ப்படாத இடத்தில் வைக்கவேண்டும். அது நாளுக்கு நாள் மறைந்து விடும். அதனை மறுமுறையும் நிரப்பி அதேபோல் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் உள்ளவர்களை அண்டி இருக்கும் கெட்ட எண்ணம், திஷ்டி என அனைத்தும் மறைந்துவிடும்.

பரிகாரம் – 4

அடுத்து குளிக்கும் நீரில் உப்பு கலந்து குளிக்கவும். அதாவது இதனால் உடலில் இருக்கும் அசதி அதேபோல் எதிர்மறை ஆற்றல் என அனைத்தும் மறையும். அதேபோல் சுறு சுறுப்பாக இருப்பீர்கள்.

பரிகாரம் – 5

வாரத்தில் ஒரு நாள் வீட்டை சுத்தப்படுத்தும் போது அந்த நீரில் கல் உப்பை கரைத்து அதன் பின்பு துடைத்தால் நன்மை நடக்கும். இதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

பரிகாரம் – 6

இந்த பரிகாரம் செய்வதால் நம்மை தொடர்ந்து துரத்தும் கஷ்டங்கள், திஷ்டி, கோபம் தேவையில்லாத குழப்பம், அதேபோல் மன கஷ்டங்கள், செய்வினை கோளாறுகள் என அனைத்தும் நீங்கி நன்மை கிடைக்கும்.

அதற்கு ஒரு வாளியில் தண்ணீரை வைத்து அதில் உப்பு சேர்த்து மனதில் என் உடலில் மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் சக்திகளையும் வெளியேற வேண்டுமென்று கால்களை வைத்து நன்கு கழுவவும். இதனை மனதில் நினைத்து 15 நிமிடம் செய்து, அதன் பின்பு அந்த தண்ணீரை பார்த்தால் அந்த தண்ணீர் கருப்பாக இருக்கும். அதேபோல் தண்ணீர் நாற்றம் வரும் சிலருக்கு ஒன்றும் வராது.

பரிகாரம் – 7

கல் உப்பு கேட்டது கிடைக்கும் அதிசயம். அதாவது கல் உப்பு கேட்டது கிடைக்கும் ஆற்றல் கொண்டது. ஆகவே பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கைகளில் உப்பு வைத்து கிழக்கு பார்த்து உட்கார்ந்து கொண்டு மடியில் வெள்ளை நிற தாளை மடியில் வைத்து கொள்ள வேண்டும். பின் கைகளில் உப்புவைத்து மூடிக்கொள்ளவேண்டும். அதன் பின்பு கண்களை மூடி கொண்டு உங்களுக்கு என்னவாக மாறவேண்டும் அதனை சத்தமாக 15 நிமிடம் சொன்னால் போதும். அதன் பின்பு மடியில் இருக்கும் தாளில் இந்த உப்பை போட்டு மடித்து வைத்துக் கொள்ளவும். இதுபோல் 2 வாரம் தொடர்ந்து செய்யவேண்டும்.

மேலும் கல் உப்பு பரிகாரம் தொடர்புடைய பதிவுகளை பார்க்க கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள் 👇
கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம்..!
வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய கல் உப்பு பரிகாரம்..!
வீட்டில் கல் உப்பை பயன்படுத்தும் போது இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது ஏன் தெரியுமா..?
வீட்டில் பணமழை பொழிய உப்பு ஜாடிக்கு கீழ் இந்த பொருளை மட்டும் வையுங்கள்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்