கழுத்தை நெறிக்கும் கடனும் எளிதில் காணாமல் போய்விடும்.. இந்த பரிகாரத்தை செய்தால்..

kadan theera bairavar valipadu

Kala Bairavar Pariharam

வாழ்க்கையில் நல்லது கெட்டது எப்படி இயல்பான ஒன்றோ அதேபோல் தான் கடன் வாங்குவதும் அதனை திரும்ப கொடுப்பதும்.. இருப்பினும் ஒரு சிலருக்கு தீராத கடன் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். என்னதான் கடனை அடைக்க முயற்சி செய்தாலும் அதற்கான நேரம் என்பதே அமையாது. எனவே அப்படி வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தடைமேல் தடை ஏற்பட்டால் ஒரு சக்திவாய்ந்த பரிகாரம் ஒன்றினை செய்ய வேண்டும். அதனை பற்றி தான் இப்பதிவில் பார்க்க இருக்கிறோம். நீங்கள் தீராத கடன் பிரச்சனையில் இருந்தால் இப்பரிகாரத்தை பின்பற்றுங்கள்..

கடன் தீர பைரவர் மிளகு பரிகாரம்:

 கடன் தீர பைரவர் வழிபாடு

இந்த பரிகாரத்தை நீங்கள் பைரவருக்கு செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்து வர வேண்டும்.

இப்பரிகாரம் செய்வதற்கு 27 மிளகு தேவைப்படும்.

எவ்ளோ கடன் இருந்தாலும் வெல்லம் மட்டும் போதும்.. கடன் தீர்ந்து பணம் பெருகும்..

பரிகாரம் செய்யும் முறை:

மிளகு பரிகாரம்

முதலில் ஒரு சிறிய வெள்ளை துணியை எடுத்து கொள்ளுங்கள். அதில் 27 மிளகினையும் வைத்து முடிச்சு போட்டு கொள்ளுங்கள்.

 kadan theera bairavar valipadu

இம்முடிச்சினை நீங்கள் இரவு தூங்கும்போது உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

பிறகு, மறுநாள் காலையில் குளித்துவிட்டு இம்முடிச்சியினை எடுத்து கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு பைரவர் சிலைக்கு ஒரு விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் இந்த மிளகு முடிச்சியினை எண்ணெய்யில் மூழ்குமாறு வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

பிறகு,நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அவர்கள் பெயரினை கூறி இவரிடம் நாம் வாங்கிய கடன் எளிதில் அடைய வேண்டும் என்று கூறி வழிபட வேண்டும்.

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வந்தால் எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் எளிதில் நீங்கிவிடும்.

 kala bairavar pariharam

இதுதவிர, வாரத்தில் ஒரு முறை கல் உப்பு மற்றும் மிளகு சேர்த்து உங்களையும் உங்கள் வீட்டையும்  சுற்றி எரியும் நெருப்பில் போட வேண்டும். இவ்வாறு செய்தால் பணக்கஷ்டம் நீங்கி பணவரவு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

கடுகளவு கூட கடன் தொல்லை இல்லாமல் இருக்க இதை மட்டும் மறந்தும் செய்யாதீங்க..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்