களத்திர தோஷம் என்றால் என்ன.. அதனை கண்டுபிடிப்பது எப்படி..

Advertisement

களத்திர தோஷம் ஜாதகம்

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரக அமைப்பும் அவரின் வாழ்க்கையில் ஒவ்வொரு முக்கிய விஷயங்களைக் கட்டுப்படுத்துவதாக இருக்கும்.  ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை சரியில்லமால் இருப்பதாலும், நாம் முன் ஜென்மத்தில் செய்த வினைகளாலும் ஏற்படுவது தான் தோஷம். ஜாதக கட்டத்தில் பல தோஷங்கள் காணப்படும். அதாவது ராகு தோஷம், புத்திர தோஷம், செவ்வாய் தோஷம் என்று காணப்படுகிறது . அப்படிப்பட்ட தோஷங்களில் ஒன்று தான் இந்த களத்திர தோஷம். சிலருக்கு நீண்ட நாளாக இருக்கும் திருமண தடைக்கான முக்கிய காரணம் இந்த களத்திர தோஷம் தான். நாம் இந்த தொகுப்பில் களத்திர தோஷம் என்றால் என்ன?, அது எதனால் ஏற்படுகிறது பற்றி எல்லாம் விரிவாக பார்க்கலாம் வாங்க.

களத்திர தோஷம் என்றால் என்ன.?

ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள்மூன்றும் இருக்கும் இடத்திலிருந்து 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது ஒன்றுடன் ஒண்டு சேர்ந்திருந்தாலோ அது களத்திர தோஷம் என்று அழைக்கப்படுகிறது.

களத்திர தோஷம் எப்படி கண்டுபிடிப்பது

4-ம் இடத்தில் சனி, சேவை, ராகு அல்லது கேது இவை மூன்றும் சேர்ந்து இருந்தாலும், 2,7ம் இடத்து அதிபதிகளும், சுக்கிரனும் கூடி பாவக் கிரகங்களுடன் சேர்ந்து 6,8,12-ம் இடத்தில் இருந்தாலும் அந்த ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது என்று கண்டறிந்து கொள்ளலாம்.  மேலும் சுக்கிரனுடன் சூரியன், சனி அல்லது ராகு, கேதுவுடன் கூடி இருந்தாலும், 7-ம் இடம் பாவக் கிரகங்களின் வீடாகி அதில் சுக்கிரன் இருந்தாலும், அது பாதகமான களத்திர தோஷம் ஆகும்.

களத்திர தோஷம் நீங்க பரிகாரம்

எதனால் ஏற்படுகிறது.?

களத்திர தோஷமானது நம்முடைய முன்னோர்கள் அல்லது பெற்றோர்கள் அல்லது முன் ஜென்மத்தில் செய்த பாவங்களால் களத்திர தோஷம் ஏற்படுகிறது.

களத்திர தோஷம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்.?

ஒருவரின் வாழ்க்கையில் களத்திர தோஷம் இருந்தால் அவர்களின் வாழ்க்கையில் திருமணமே நடக்காமல் போகிவிடும்,. இல்லெயென்றால் திருமணம் நடப்பது தாமதம் ஆகலாம். அப்படியே ஒருவேளை திருமணம் நடந்தாலும் அவர்களின் இல்லற வாழ்க்கையில் அதிக பிரச்சனைகள் ஏற்படும். கணவன் மனைவி இரண்டு பேரும் எலியும், பூனையுமாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்ல மாட்டார்கள்.

ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்..!

களத்திரம் பொருள் என்ன?

திருமணத்துக்கு முன்னோ அல்லது பின்னோ வாழ்க்கை துணையினை குறிப்பது களத்திரம் என்ற சொல் ஆகும். ஜாதகத்தில், 7ஆம் வீடு களத்திர ஸ்தானம் எனப்படும். அதாவது, ஆணின் ஜாதகத்தில் 7ஆம் இடம் மனைவியினையும் பெண்ணின் ஜாதகத்தில் 7ஆம் இடம் அவரது கணவனை குறிக்கும்

யாருக்கு பார்க்க வேண்டும்:

களத்திர தோஷம் பெண்ணிற்கு இருக்கா என்பதை மட்டும் பார்த்தால் போதும், ஆண்களுக்கு பார்க்க வேண்டியதில்லை.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement