Kalikambal 108 Potri in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காளிகாம்பாள் 108 போற்றி (Kalikambal 108 Potri) பற்றி பார்க்கலாம் வாங்க. கருணை தெய்வம் காளிகாம்பாள். காளிகாம்பாள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். காளிகாம்பாள் கோவில் ஆனது மிகவும் பிரபலமான கோவில் ஆகும். இந்த கோவில் சென்னையில் உள்ள பழைய ஜார்ஜ் டவுனில், பாரிமுனை பகுதியில் உள்ள தம்புச்செட்டி என்னும் தெருவில் அமைந்துள்ளது. இக்கோவில்1640-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
அன்னை காளிகாம்பாள் வடிவம் எழில் கொஞ்சும் திருமேனியுடன், ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பல மலர் மற்றும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலத்துடன் காணப்படுகிறாள். நமக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடிய காளிகாம்பாளின் 108 போற்றியை நாம் அனைவருமே அறிந்துகொள்ள வேண்டும்.
காளியம்மன் கனவில் வந்தால் என்ன பலன்..!
காளிகாம்பாள் 108 போற்றி:
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங் குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி
ஓம் அமுத நாயகியே போற்றி
ஓம் அருந்தவ நாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றாய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் சுந்தரியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச்சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கினியாய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி
ஓம் காமாட்சி அம்பிகையே போற்றி
ஓம் காளிகாம்பாள் அம்பிகையே போற்றி
ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடர்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞான தாயே போற்றி
ஓம் ஷக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்தோய் போற்றி
ஓம் சிவாகம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்த வல்லியே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்குக் கரசியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவநெறி நிலைக்கச்செய்தாய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞான பூங்கோதையே போற்றி
ஓம் தமிழர் குலைச்சுடரே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்த பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமா தேவியின் தேவி போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயிலம்மையே போற்றி
ஓம் பொற்க்கொடி அம்மையே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மழலைக் கிளியே போற்றி
ஓம் மனோன்மணித்தாயே போற்றி
ஓம் மண் சுமத்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சியம்மையே போற்றி
ஓம் முழு ஞானப்பெருக்கே போற்றி
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேத நாயகியே போற்றி
ஓம் சௌந்தராம்பிகையே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி
ஸ்ரீ காமாட்சி அம்மையே போற்றி
ஸ்ரீ காளிகாம்பாள் அம்மையே போற்றி
ஸ்ரீ காளிகாம்பாள் அம்மையே போற்றி போற்றி!
சூரிய பகவான் ஸ்லோகம் மற்றும் 108 போற்றி..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |