காலில் கருப்பு கயிறு கட்டினால் என்ன பலன்
பலருடைய கால்களில் கருப்பு கயிறு இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஒரு சிலருக்கு மட்டும் தான் கால்களில் கருப்பு கயிறு கட்டிருப்பதற்கான காரணம் தெரியும். பலருக்கு குழப்பமாக இருக்கும், எதனால் கருப்பு காட்டுகிறார்கள், நாம் கருப்பு கயிறு கட்டலாமா என்று பல கேள்விகள் இருக்கும். அந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் பதிவாக இருக்கும். சரி உங்களுடைய கேள்வி அனைத்திற்கும் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.
கருப்பு கயிறை எதற்காக கட்டுகிறோம்:
கல்லால் அடிபட்டாலும் கண்ணால் அடிபட கூடாது என்று நமது முன்னோர்கள் சொல்வார்கள். எத்தனை வயதானாலும் இந்த திருஷ்டி மனிதனை மிக சுலபமாக வந்தடைகிறது. இதற்கு வயது வித்தியாசம் என்பது இல்லை. இதன் காரணமாவே நமது முன்னோர்கள் இந்த திருஷ்டியை போக்குவதற்கு சில விஷயங்களை கடைபிடித்துள்ளனர். அவற்றில் ஒன்று தான் காலில் கருப்பு கயிறு கட்டுவது.
வயதுக்கு வந்த பெண்களை காத்து கருப்பு அண்டாமல் இருப்பதற்கு கருப்பு நிறம் கயிறை மந்திரிச்சி காலில் கட்டி விடுவார்கள். பொதுவாக அனைவருமே இந்த கருப்பு கயிறை காலில் கட்டி கொள்ளலாம். இதனை கட்டிக்கொள்வதினால் திருஷ்டி, தீய பார்வை, தீய எண்ணம் இது போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
கருப்பு கயிறை எப்படி கட்ட வேண்டும்:
இந்த கருப்பு கயிறை ஆண்களாக இருந்தால் வலது காலிலும், பெண்களாக இருந்தால் இடது கால்களும் கட்டிக்கொள்ளலாம். இந்த கருப்பு கயிறு கட்டுவதற்கும் சில விதிமுறைகள் இருக்கிறது அது என்னவென்றால் 5 முடிச்சி 9 முடிச்சி உள்ள கருப்பு கயிறை வாங்கி அதனை பூஜை செய்த பிறகு தான் காலில் கட்ட வேண்டும். அதுவும் ஆஞ்சநேயர், காளி, பைரவர், சரபேஸ்வரர், ப்ரத்யங்கிரா, சூலினி தேவி இதுபோன்ற தெய்வங்கள் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அங்கு சாமியிடம் வைத்து பூஜை செய்து உங்கள் காலில் கட்டி கொள்ளலாம். மேலும் இந்த கயிறை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய கிழமைகளில் தான் பூஜை செய்து கட்ட வேண்டும். சனிக்கிழமை கட்டுவதாக இருந்தால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று பூஜை செய்து கட்டிக்கொள்ளலாம்.
குழந்தைகள் கருப்பு கயிற்றை கட்டலமா.!
குழந்தைகள், கர்பிணிப்பெண்கள், வயதானவர்கள் என்று அனைவருக்கும் காலில் கருப்பு கயிறை கட்டிக்கொள்ளலாம். இருப்பினும் இந்த கயிறை காலில் கட்டிய நாளில் இருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை மறுபடியும் மாற்றிக்கொள்ளலாம். அல்லது கயிறு கழன்று கீழே விழுந்த பிறகும் கூட மற்றொரு கயிறை பூஜை செய்து காலில் கட்டிக்கொள்ளலாம்.
குறிப்பு: கருப்பு நிறம் ஒற்றுக்கொள்ளாது என்று சொல்பவர்கள் மட்டும் இந்த கயிறை காலில் கட்டுவதை தவிர்த்துக்கொள்ளவும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |