எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியானாலும் இதை மட்டும் ஒருமுறை செய்யுங்க உடனடியாக நீங்கிடும்..!

Advertisement

Kan Thirusti Neenga Manthiram in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான குணம் என்றால் அது பொறாமை குணம் தான். ஒரு சிலருக்கு இந்த குணம் குறைவாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு அதிக அளவு இருக்கும். அவர்களுக்கு தங்களைவிட மற்றவர்கள் உயர்ந்துவிட்டார்கள் என்றாலே பிடிக்கவே பிடிக்காது. அவர்களை பார்த்து பார்த்து பொறாமை படுவார்கள். அதனால் இவர்களால் மற்றவர்களுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதாவது உங்களின் வீட்டில் தொடர்ந்து ஆரோக்கிய பிரச்சனையும், பணப்பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படுகின்றது என்றால் உங்களின் வீட்டிற்கு வரும் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களால் உங்களின் வீட்டின் மீது கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். அதனால் தான் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து  கண்திருசிஷ்டியையும் போக்க உதவும் சில எளிமையான வழிமுறைகளை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ளவற்றை பின்பற்றி பயன் பெறுங்கள்.

வீட்டில் வைக்க இடம் இல்லாத அளவிற்கு பணவரவு அதிகரிக்க சீரகம் மட்டும் போதும்

கண் திருஷ்டி போக்கும் மந்திரம்:

Kan Thirusti Poga Manthiram in Tamil

அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை உங்களால் முடிந்த அளவு பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான கண்திருசிஷ்டி பிரச்சனைகளும், ஆபத்துக்களும் நீங்கிவிடும்.

மந்திரம்:

ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்

த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்

நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்

வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

பொருள்:

சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை ஆகியன தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, நமஸ்காரம்.

முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினரே, பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்திரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.

சீரடி சாய்பாபாவின் அஷ்டோத்திரம்

சில எளிய வழிமுறைகள்:

நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் மேலே கூறியுள்ள மந்திரத்தை கூறிவிட்டு சில வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

அதாவது பெளர்ணமி நாளில் வீட்டு வாசலில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம். அதேபோல் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வீட்டு வாசலில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம்.

கண் திருஷ்டி அதிகமாக இருக்கா அப்போ இதை செய்யுங்க

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement