Kan Thirusti Neenga Pariharam
வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் கண் திருஷ்டி ஏற்படும் என்று கூறுகிறார்கள். கண் திருஷ்டி ஏற்பட்டு விட்டால் வீட்டில் நிம்மதி என்பதே இருக்காது. வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏதோவொரு வகையில் கஷ்டங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். சிலருக்கு கண் திருஷ்டி ஏற்பட்டு விட்டால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். எனவே, கண் திருஷ்டியை போக்கும் விதமாக நம் முன்னோர்கள் சில பரிகாரங்களை செய்வார்கள். அப்பரிகாரங்களில் முதன்மையானது கல் உப்பு பரிகாரம் மற்றும் எலுமிச்சை பரிகாரம். கல் உப்பு மற்றும் எலுமிச்சை பழத்திற்கு கண் திருஷ்டியை நீக்கும் சக்தி உள்ளது. எனவே, இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தி கண் திருஷ்டி பரிகாரம் எப்படி செய்வது என்று இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.
வீட்டில் கண் திருஷ்டி கழிப்பது எப்படி.?
கல் உப்பு பரிகாரம்:
இப்பரிகாரத்தை நீங்கள் ஞாயிற்று கிழமையில் செய்ய தொடங்கலாம். அதுமட்டுமில்லாமல், இப்பரிகாரத்தை வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிய பின் செய்ய வேண்டும்.
முதலில் கண்ணடி டம்ளரை எடுத்து தண்ணீர் நிரப்பி கொள்ளுங்கள். இத்தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பை போட்டு விடுங்கள்.
இதனை, வீட்டில் யாரும் படுக்காத இடத்தில் வைத்து விடுங்கள். பிறகு மறுநாள் காலையில் முதல் வேலையாக இதனை எடுத்து செடிகளில் அல்லது கிச்சனில் உள்ள சிங்கில் ஊற்றிவிடுங்கள்.
இதேபோல், நீங்கள் ஞாயிற்று கிழமையிலிருந்து வியாழக்கிழமை வரை செய்து கொள்ளுங்கள். பிறகு, வெள்ளிக்கிழமை காலையில் குளித்து வீட்டில் மஞ்சள் நீரை தெளித்து விட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம், வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கி விடும்.
இந்த அறிகுறிகள் இருந்தால் கண் திருஷ்டி இருக்கிறது என்று அர்த்தம்..!
எலுமிச்சை பரிகாரம்:
கண்திருஷ்டி நீங்க எலுமிச்சை பரிகாரம் ஒரு நல்ல தீர்வாக அமையும். இப்பரிகாரத்தை நீங்கள் செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம் அல்லது அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் செய்யலாம்.
ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை இரண்டாக நறுக்கி அதில் குங்குமம் தடவி வீட்டின் நிலைவாசலில் இருபுறமும் வைக்க வேண்டும்.
பிறகு, மறுநாள் அதனை எடுத்து கால் தடம் படைத்த இடத்தில் வீசி விடலாம். அல்லது உங்கள் வீட்டில் உள்ள செடிகளில் போட்டு விடலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் வீட்டில் இருக்கும் திருஷ்டி நீங்கி குடும்பம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
கண் திருஷ்டி அதிகமாக இருக்கா.! அப்போ இதை செய்யுங்க..
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |