வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய கல் உப்பு பரிகாரம்..!

Updated On: January 20, 2023 1:37 PM
Follow Us:
கல் உப்பு பரிகாரம்
---Advertisement---
Advertisement

ஆன்மிக தகவல்கள் – வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய கல் உப்பு பரிகாரம்..!

கல் உப்பு பரிகாரம் – ஒரு வீட்டில் எதிர்மறையான விஷங்கள் நிகழ்ந்தால், அந்த வீட்டில் பல பிரச்சனைகள் நிகழும், மேலும் பார்க்கும் வேலைகளில் ஈடுபாடுகள் இல்லாமல் இருக்கும், எந்த விஷயத்திலும் எளிதில் முடிவு எடுக்க முடியாது, ஒரு செயலை செய்யலாமா? வேண்டாமா ? என்ற எண்ணம் தோன்றும். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சிலர் காலையில் நன்றாக இருப்பார்கள் மாலையில் அவர்களுக்கு திடீரென்று உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது, கல்யாணம் மற்றும் சுப நிகழ்வுகள் வீட்டில் நடக்காமல் தள்ளிப் போவது, வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருப்பது, அதாவது ஏதோ வேலைக்கு போகிறோம் வருகிறோம் என்று இருப்பது.

பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை, பணம் கிடைப்பதற்கு தாமதம், பணம் வந்தும் பற்றாக்குறை போன்றவை. ஜாதக கிரக நிலைகளுக்கு அப்பாற்பட்டு, வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் காரணமாக, வீட்டிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்பட்டிற்கும் கண் திருஷ்டி (kan thirusti pariharam in tamil), மேலும் கணவன் மனைவி குழுந்தைகளுடன் சேர்ந்து வெளியில் கிளம்பும்போது, ஏற்படும் குடும்ப கண் திருஷ்டி, சில குடுபங்களில் மாதம் ஒருமுறையாவது மருத்துவமனைக்கு செல்வது போன்ற விஷயங்களால், குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த அனைத்து பிரச்சனைகளும் தீர இந்த எளிமையான கல் உப்பு பரிகாரம் செய்தாலே போதும் அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடிவிடும்.

வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய கல் உப்பு பரிகாரம்:-

கல் உப்பு பரிகாரம்:- கல் உப்பு, காய்ந்த மிளகாய் (நீளமானது) 4, எலுமிச்சை பழம் 1, கண்ணாடி கோப்பை 1, இந்த பரிகாரம் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கும் ஒரு எளிய பரிகாரம்.

இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யவேண்டும். அப்போதுதான் பலன்கள் அதிகமாக கிடைக்கும்.

ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, ஒரு எலுமிச்சை பழத்தை கல் உப்பின் நடுவில் நிற்க வைக்கவேண்டும்.

பிறகு நான்கு காய்ந்த மிளகாயை அதனை சுற்றி நான்கு மூலைகளிலும் சொருக வேண்டும்.

மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனை தலைவாசல் கதவின் உட்புற பகுதியின் மூலையில் வைக்கவேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றவேண்டும்.

அவ்வாறு மாற்றும்போது அந்த மூன்று பொருட்களையும் (கல் உப்பு, எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய்) ஓடும் நீரில் விட்டுவிடலாம் அல்லது மூன்று பொருட்களையும் சேகரித்து யார் காலிலும் படாதவாறு போட்டுவிடவேண்டும்.

இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கலாம்.

குலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி?

 

இதுபோன்று ஆன்மிக தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now