இந்த அறிகுறிகள் இருந்தால் கண் திருஷ்டி இருக்கிறது என்று அர்த்தம்..!

Kan Thirusti Symptoms Tamil

Kan Thirusti Symptoms in Tamil

வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய ஆன்மிகம் பதிவில் கண் திருஷ்டி இருப்பதை காட்டும் அறிகுறிகளை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த காலகட்டம் எவ்வளவு தான் மாறி இருந்தாலும் நம் முன்னோர்கள் சொல்லிய சில தகவல்களை இன்றும் நாம் பின் பற்றி வருகிறோம். அப்படி நாம் பின் பற்றி வரும் முறைகளில் ஓன்று தான் கண் திருஷ்டி. இந்த காலத்தில் இருக்கும் மக்கள் கூட கண் திருஷ்டி இருப்பதை நம்புகிறார்கள். கண் திருஷ்டி இருப்பதை காட்டும் அறிகுறிகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…

கண் திருஷ்டி போகுவதற்கு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்..

கண் திருஷ்டி:

நம் குடும்பத்தில் கண் திருஷ்டி இருப்பதை சிலவற்றை வைத்து தெரிந்து கொள்ளலாம். நம் வீட்டில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கண் திருஷ்டியாக இருக்கும் என்று சொல்வார்கள்.

தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என ஏதும் பிரச்சனைகள் இருந்தால் கண் திருஷ்டி என்று கூறுகிறார்கள்.

நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று. அவ்வாறு கண் திருஷ்டி இருந்தாலும் உண்மையில் கண் திருஷ்டி இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது.

கண் திருஷ்டி அறிகுறிகள்:

நம் வீட்டில் ஏதும் குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தையை பார்க்க வருபவர்கள் குழந்தையை பற்றி ஏதும் புகழ்ந்து பேசினாலோ அல்லது குழந்தை அழகாக இருக்கிறது என்று கூறினாலோ அது கண் திருஷ்டியாக மாறி விடுகிறது.

அதனால் அந்த குழந்தைக்கு தூக்கமின்மை, தொடர்ந்து அழுவது மற்றும் சோர்வாக காணப்படுவது போன்ற சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை தான் நாம் கண் திருஷ்டி என்று கூறுகிறோம்.

அதேபோல ஒரு பிரச்சனையை சரி செய்வதற்குள் அடுத்த பிரச்சனை வந்துவிடும். தொடர்ந்து ஏதாவது ஒரு பாதிப்பு வந்து கொண்டே இருக்கும். இப்படி இருந்தால் கண் திருஷ்டி இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்வது, பயப்படுதல் போன்றவை இருந்தால் கண் திருஷ்டி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

கணவன் மனைவி இடையே காரணம் இல்லாமல் சண்டை வருவது, சந்தேகங்கள் ஏற்படுவது, தொடர்ந்து சண்டைகள் இருப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால் கண் திருஷ்டி இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

கண் திருஷ்டி இருந்தால் உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள் வருவது, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

கண் திருஷ்டி என்பது உண்மையா ? பொய்யா ?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்