Dog Biting Dream Meaning in Tamil | கனவில் நாய் கடித்தால் என்ன பலன்
வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! மனிதனாக பிறந்த அனைவருக்கும் தூங்கும் போது தினமும் ஒவ்வொரு கனவுகள் வரும். அந்த கனவில் நமக்கு பிடித்தவர்கள், பறவைகள், விலங்குங்கள் என்ற இன்னும் எண்ணற்ற கனவுகள் தூக்கத்தில் வரும். அத்தகைய கனவுகளில் ஒரு சிலருக்கு நாய் கடிப்பது போல் கனவு வரும். இது மாதிரி கனவுகள் வரும் போது மறுமுறை நாயை பார்த்தால் சிலருக்கு பயமாக இருக்கும். இந்த கனவுக்கு என்ன பலன் என்றும் தெரியாமல் இருக்கும். ஆகவே இன்றைய பதிவில் கனவில் நாய் கடிப்பதற்கான பலன் என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
நம்மில் பலருக்கும் நாய் கடிப்பது போல கனவு வந்திருக்கும். ஆனால், கனவில் நாய் கடித்தால் என்ன பலன் என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் கனவில் நாய் கடித்தால் என்ன பலன் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
இதையும் படியுங்கள்⇒ நாய் ஊளையிடுவது நல்லதா.. கெட்டதா.. இதுதான் உண்மை காரணம்
கனவில் நாய் கடித்தால் என்ன பலன்? | Nai Kadipathu Pol Kanavu Vanthal:
நாய் கால பைரவரின் வாகனமாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அனைவருடைய வீட்டிலும் செல்ல பிராணியாக வளர்ந்து வருகிறது.
நம்மை வீட்டை பாதுகாக்கும் ஒரு செல்ல பிராணியாகவும் இந்த நாய் இருக்கிறது. மனிதர்களிடம் அன்பாக பழகும் செல்ல பிராணி இந்த நாய்.
ஐந்து அறிவு கொண்ட இந்த பிராணி நன்றியை எப்போதும் மறக்காமல் தன்னை வளர்த்தவர்களுக்கு உண்மையாக இருக்கிறது.
அத்தகைய நாய் உங்களை கடிப்பது போல கனவு வந்தால் உங்களுக்கு வரப்போகும் ஆபத்துகளை முன் கூட்டியே உணர்த்துகிறது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் சனி பகவானின் தாக்கத்தால் உங்களுக்கு வரபோகும் ஆபத்துகளை உங்களுக்கு உணர்த்துகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த மாதிரி கனவுகள் வரும் போது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது மிகவும் நல்லது என்று சாஸ்திரத்தில் சொல்கிறார்கள்.
நாய் கடிப்பது போல் கனவு வந்தால் உங்களுடன் நெருங்கி பழகும் நபர்களாலும் நீங்கள் எதிர் பார்க்காத கஷ்டங்கள் வரும் வாய்ப்பு இருக்கிறது என்று ஆன்மீகத்தில் சொல்கிறார்கள்.
வியாபாரம் செய்பவர்கள் அதில் நஷ்டம் ஏற்படாதவாறு கவனமாக இருந்து செயல்பட வேண்டும். யாரையும் பகைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
இத்தகைய கனவு வரும்போது உங்கள் குடும்பத்தினர் மீதும் எந்த விதமான ஆபத்துக்கள் வராமலும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.
நாய் கடிப்பது போல் கனவு வந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்:
சனியின் பாதிப்பால் நாய் கடிப்பது போல கனவு வருவதனால் 5 முறை விநாயகருக்கு அருகம்புல் மாலை போட்டு வழிபடுவதன் மூலம் நமக்கு வரும் ஆபத்துகளில் இருந்து விடு பட முடியும் என்று சாஸ்திரத்தில் சொல்கிறார்கள்.
மாலை நேரங்களில் பைரவருக்கு அரளி பூ மாலை அணிந்து வழிபட்டு வந்தால் உங்களுக்கு நன்மை என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
உங்கள் வீட்டில் நாய் இருக்கிறதா.? அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |