புறா கனவில் வந்தால் என்ன பலன்..! Kanavil Pura Vanthal Enna Palan in Tamil..!
பொதுவாக மனிதர்கள் அனைவருக்கும் தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி சரியாக தூங்கவில்லை என்றால் உடல் நலத்தில் குறைபாடுகள் வரும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நமக்கு சில கனவுகள் தினந்தோறும் வரும். ஆனால் இதுமாதிரி கனவு வருவதை இன்றைய காலத்தில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஏனென்றால் நாம் எதை நினைத்துக்கொண்டு தூங்க செல்கிறோமோ அது தான் கனவாக வருகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் ஆன்மீகக்கத்தில் ஒவ்வொரு கனவுக்கு ஒவ்வொரு பலன் கூறப்படுகிறது. அந்த வகையில் சிலருக்கு பறவைகள், விலங்குகள், இறந்தவர்கள் என நிறைய கனவுகள் வரும். அத்தகைய கனவுகள் அனைத்திற்கும் ஏதோ ஒரு வகையான பலன் இருக்கிறது. எனவே கனவில் புறா வந்தால் என்ன பலன் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
மயில் கனவில் வந்தால் என்ன பலன்.. |
கனவில் புறா வந்தால் என்ன பலன்:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் தூங்கும் போது கனவு வரும். அதிலிலும் சிலருக்கு இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட கனவுகள் வரும் என்றும் கூறுவார்கள்.
இப்படி கனவு வரும் பட்சத்தில் குழந்தைகள் திடீரென்று அழத்தொடங்கிவிடும். ஆனால் பெரியர்வகள் அத்தகைய கனவிற்கான பலன் என்னவாக இருக்கும் என்று தான் சிந்தித்து கொண்டே இருப்பார்கள்.
சிலருக்கு தூங்கும் போது வரும் கனவிற்கான பலன் தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு அதற்கான பலன் என்னவென்று தெரியாமல் யோசித்து கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் உங்களுக்கு தூங்கும் போது கனவில் புறா வந்தால் அதற்கான பலன் என்ன தெரியுமா..?
இதையும் படியுங்கள் 👉👉
எந்த பறவை வீட்டிற்குள் வந்தால் மிகவும் அதிர்ஷ்டம் உங்களுக்கு தெரியுமா..
கனவு பலன்:
புறாவை நீங்கள் பிடிப்பதற்காக முயற்சி செய்வது போல் கனவு கண்டால் புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆகப்போகிறார்கள் என்பது தான் இதற்கான பலன்.
அதுவே வெள்ளை நிற புறா கனவில் வந்தால் நீங்கள் பணிபுரியம் வேலையில் மாற்றங்கள் வரப்போகிறது என்று அர்த்தம்.
உங்களுடைய கனவில் இரு புறாக்கள் ஜோடியாக இருப்பது போல கனவு வந்தால் உங்களுடைய நெருங்கிய நண்பர்களுடன் பிரிவு வருவதற்கான அர்த்தமாக கருதப்படுகிறது.
அதுபோலவே கூட்டமாக புறாக்கள் இருப்பது போல கனவு கண்டால் அதற்கான பலனாக நீங்கள் உங்களுடைய உறவு முறைகளில் சில உறவுகளை பிரியும் சூழல் ஏற்படும் என்பதே இதற்கான அர்த்தம்.
மேலும் கருப்பு நிறத்தில் உள்ள புறாவை நீங்கள் தூங்கும் போது கனவில் கண்டால் உங்களுக்கு ஏதோ துன்பமான செய்தி ஒன்று வரப்போகிறது என்று கூறப்படுகிறது.
மேலும் இதுபோன்ற கனவு பலன்கள்👉👉 கனவு பலன்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |