Kanavil Vellam Vanthal Enna Palan
மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஆழ்ந்த தூக்கத்தில் உள்ள பொழுது கனவு வருவது மிகவும் சகஜமான ஒரு விஷயம் ஆகும். இந்த கனவுகள் பொதுவாக நமது ஆழ் மனதில் என்ன எண்ணங்கள் உள்ளதோ அதன் அடிப்படையில் தான் வருகின்றது என்பது அறிவியலின் கூற்று ஆகும். ஆனால் நமக்கு வரும் கனவினை வைத்து நமது வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்க போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
அதனால் அனைவருக்குமே நாம் கண்ட கனவிற்கு என்ன பலன் என்பதை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். எனவே தான் நமது நமது ஆன்மிகம் பதிவின் மூலம் தினமும் ஒரு கனவு பலனை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் வெள்ளத்தை கனவில் கண்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். நீங்களும் வெள்ளம் கனவில் கண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவை முழுதாக படித்து உங்கள் கனவிற்கான பலனை அறிந்து கொள்ளுங்கள்..!
காலணிகளை கனவில் கண்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா
கனவில் வெள்ளம் வந்தால் என்ன பலன்:
பொதுவாக நமது கனவில் வெள்ளம் பற்றி கனவு வந்தால் நமக்கு வினோதமானதாகவும், பயமுறுத்துவதாகவும், வேதனையை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.
ஏனென்றால் பொதுவாக நம்மை சுற்றி தண்ணீர் இருப்பதை கண்டால் நாம் ஒடுக்கப்பட்டதாக உணருவீர்கள். இப்பொழுது இந்த கனவுக்கான பொதுவான பலன் என்னவென்றால் கூடிய விரைவில் உங்களது வாழ்க்கையில் பலவகையான தடைகள், சிரமங்கள் ஏற்பட போகின்றது என்பதை குறிக்கின்றது.
எள்ளு கனவில் வந்தால் இதுதானா பலன்
நீங்கள் வெள்ளத்தில் இருப்பதாக கனவு காண்டால் பலன்:
நீங்கள் வெள்ளத்தில் இருப்பதாக கனவு காண்டால் பொதுவாக கெட்ட சகுனம் ஆகும். அதாவது உங்கள் செயல் மற்றும் சிந்தனையில் பலவகையான மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த கனவு குறிக்கின்றது.
நீங்கள் வெள்ளத்தால் கொண்டு செல்லப்படுவது போல் கனவு காண்டால் பலன்:
நீங்கள் கனவில் வெள்ளத்தால் கொண்டு செல்லப்படுவது போல் கனவு காண்டால் அது உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கெட்டது நடக்க இருக்கின்றது என்பதை குறிக்கின்றது.
அம்மன் சிலை கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |