வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கந்த சஷ்டி விரதம் எத்தனை நாள் இருக்க வேண்டும்.? எப்படி இருக்க வேண்டும்.?

Updated On: October 24, 2024 3:01 PM
Follow Us:
Kandha Sashti Viratham Eppadi Irupathu
---Advertisement---
Advertisement

How Many Days Kandha Sashti Viratham in Tamil | கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி.? 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கந்த சஷ்டி விரதம் எத்தனை நாள் இருக்க வேண்டும்.? எப்படி இருக்க வேண்டும்.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். முருகப்பெருமானின் முக்கிய விரத நாளாக இருக்கக்கூடியது தான் சஷ்டி விரதம். சஷ்டி விரதம் மாதம் மாதம் வரும். ஆனால், மகா கந்த சஷ்டி விரதம் வருடத்தில் ஒருமுறை மட்டுமே வரும். அப்படி இந்த வரும் மகா கந்த சஷ்டி விரதம் ஆனது, நவம்பர் 02 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 07 ஆம் தேதி முடிவடைகிறது. கந்த சஷ்டி காலத்தின் கடைசி நாள் சூரசம்ஹாரம் விழாவும் உள்ளது.

விரதங்களில் மிகவும் கடுமையான விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும். கந்த சஷ்டி விரதம் இருந்தால் அனைத்தும் நன்மையாகவே நடக்கும். முக்கியமாக, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்தால், முருகனின் அருள் பரிபூரணமாக கிடைத்து, குழந்தை வரம் கிட்டும். “சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழிக்கு ஏற்ப சஷ்டி திதியில் விரதம் இருந்தால், அகப்பை என்னும் கருப்பையில் குழந்தை வரும். எனவே, கந்த சஷ்டி விரதம் இருந்து அனைவரும் பயனடைவோம்.

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

Kandha Sashti Viratham Eppadi Irupathu:

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி

ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி, மகா கந்தசஷ்டி எனப்படுகிறது. குழந்தை வரத்திற்காக மட்டுமின்றி வாழ்க்கையில் எப்படிப்பட்ட தீராத பிரச்சனை, நோய், துன்பம், பண பிரச்சனை இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் கந்த சஷ்டி விரதம் இருந்தால், நீங்கும்.

கந்த சஷ்டி விரதம் எத்தனை நாள் இருக்க வேண்டும்.?

  • கந்த சஷ்டி விரதம் இருக்கும் பலருக்கும் இருக்க வேண்டிய குழப்பம் என்னவென்றால், கந்த சஷ்டி விரதம் 6 நாட்கள் இருக்க வேண்டுமா.? 7 நாட்கள் இருக்க வேண்டுமா.? என்பது தான். உண்மையாக சொல்லப்போனால், கந்த சஷ்டி விரதம் என்பது 7 நாட்கள் தான். ஆனால், பலரும் பிரதமை திதி துவங்கி சஷ்டி திதி வரையும் தான் இருக்க வேண்டும் என்று நினைத்து ஆறாவது நாளான சூரசம்ஹாரம் அன்று விரதத்தை நிறைவு செய்கிறார்கள்.
  • ஐப்பசி மாத பிரதமை திதிதொடங்கி, சஷ்டி திதிக்கு மறு நாள் வரும் சப்தமி அன்று வரை விரதம் இருக்க வேண்டும். அதாவது, சூரசம்ஹாரம் முடித்து மறுநாள் வள்ளி-தெய்வசேனா சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும் நாள் வரை விரதம் இருக்க வேண்டும்.

கந்த சஷ்டி விரதம் எப்படி இருக்க வேண்டும்.?

  • கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் காலை மாலை என இருவேளையும் குளித்து விட்டு, அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று, முருகனுக்கு உரிய மந்திரங்களை கூறி பால், பழம் என உங்களால் முடிந்த பொருளை நெய்வேத்தியம் படைத்து வழிப்பட வேண்டும்.
  • முருகனின் படம் மற்றும் வெலிற்கு அபிஷேகம் செய்து, காலை மாலை என இருவேளையும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படித்து வழிபட வேண்டும்.
  • கந்த சஷ்டி விரதம் பல வழிகளில் இருக்கலாம். சிலர் தண்ணீர் மட்டும் அருந்தி விட்டு விரதம் இருப்பார்கள். இன்னும் சிலர் பால் பழம் மட்டும் அருந்திவிட்டு விரதம் இருப்பார்கள்.
  • இன்னும் சிலர் ஒரு வேலை உணவு உண்டும் இருப்பார்கள். அதுவே உடல்நிலை சரியில்லாதவர்கள் என்றால், அதாவது, சாப்பிடாமல் இருந்தால் உடலில் மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்பவர்கள் இரண்டு வேலை உணவு உண்டு விரதம் இருப்பார்கள்.
  • இவ்வாறு கந்த சஷ்டி விரதம் ஆனது, பல வழிகளில் இறுக்கப்படுகிறது. ஆகையால், உங்கள் உடலின் நிலைக்கு ஏற்ப ஒரு விரதத்தை தேர்வு செய்து 7 நாட்களும், முருகனை மனதார நினைத்து விரதம் இருக்கலாம்.
  • முக்கியமாக, குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் முருகனை வேண்டிக்கொண்டு விரதம் இருந்தால், அந்த முருகனே அவர்களுக்கு பிள்ளையாக பிறப்பார்.
  • கந்த சஷ்டி விரதம் இருக்கும் 7 நாட்களும், முருகனின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டியது அவசியம். கந்த சஷ்டி கவசம் படித்தல், திருப்புகழ் படித்தல்/கேட்டல் என முருகனுக்கு உகந்தவற்றை செய்ய வேண்டும்.

சஷ்டி விரதம் அன்று திருமணம் செய்யலாமா..?

கந்த சஷ்டி விரதம் முடிப்பது எப்படி.?

சூரசம்ஹாரம் முடிந்து மறுநாள், முருகனின் திருக்கல்யாணம் பார்த்த பிறகு, வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு விளக்கேற்றி பூஜை செய்து சர்க்கரை கலந்த பால் நைவேத்தியமாக படைத்து, கந்த சஷ்டி கவசம் பாடலை பாடி, நைவேத்தியமாக படைக்கப்பட்ட பாலை அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now