கந்த சஷ்டி விரதம் அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்.!

Advertisement

kandha Shashti Vratham Mantra in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கந்த சஷ்டி விரத நாட்களில் விரதம் நாட்களில் சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் ஆனது, நவம்பர் 02 ஆம் தேதி துவங்கி நவம்பர் 07 ஆம் தேதி முடிவடைகிறது.இந்த நாட்களில், முருகனை நினைத்து வழிபட்டால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். முக்கியமாக, குழந்தை இல்லாதவர்கள், மகா கந்த சஷ்டி நாளில் விரதம் இருந்து வழிபட்டால் முருகனே குழந்தையாக வந்து பிறப்பார்.

கேட்ட வரத்தினை அளிப்பவர் கந்தன். எனவே, உங்கள் வேண்டுதல்களை கந்தனிடம் கூறி விரதம் இருந்து வழிபடுங்கள். அப்படி விரதம் இருக்கும்போது முருகனுக்கு உகந்த மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். எனவே, கந்த சஷ்டி நாளில் என்னென்ன மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

கந்த சஷ்டி விரதம் எத்தனை நாள் இருக்க வேண்டும்.? எப்படி இருக்க வேண்டும்.?

கந்த சஷ்டி விரத அன்று சொல்ல வேண்டிய மந்திரம்:

கந்த சஷ்டி விரத அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

கந்தனை போற்றி சொல்லப்படும் மந்திரம்:

ஓம் ஐம் க்லீம் செளம்
சரவண பவாய
குமார தேவாய நமக

இந்த மந்திரத்தை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களும் சொல்லலாம் இருக்க முடியாதவர்களும் சொல்லலாம். இம்மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். முக்கியமாக தெற்கு திசை நோக்கி நோக்கியவாறு அமர்ந்து தான் இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

மூல மந்திரம்:

ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ

இந்த மந்திரத்தை கந்த சஷ்டி நாளில் 108, 1008, 10008 மற்றும் 100008 என உங்களால் முடிந்த அளவிற்கு உச்சரிக்கலாம். 1 லட்சம் முறை உச்சரித்தால் எம பயம் நீங்கும்.

முக்கியமாக, கந்த சஷ்டி கவசம் வரிகளை உச்சரிக்க வேண்டும்.

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement