வீட்டில் எந்த இடத்தில் கண்ணாடியை வைக்கக்கூடாது தெரியுமா..?

Advertisement

Kannadi Vastu in Tamil

நாம் எப்படி இருக்கின்றோம் என்பதை மிகவும் அழகாக நமக்கு நம்மையே பிரதிபலித்து காட்டுவது கண்ணாடி மட்டுமே. இந்த காலத்தில் என்ன தான் பல கேமராக்கள் வந்தாலும் கூட கண்ணாடி அளவிற்கு ஈடாக முடியாது. ஏனென்றால் கண்ணாடி என்பது நம்முடைய தோற்றத்தினை மட்டுமே காண்பிக்கும் ஒன்றாக இல்லாமல் ஆன்மீகத்தில் பல வாஸ்து முறையினை கொண்டிருக்கிறது. ஆகவே இத்தகைய கண்ணாடியை எல்லா இடங்களிலும் வைக்காமல் இடத்தில் தான் வைக்க வேண்டும். ஏனென்றால் கண்ணாடியினை நாம் மாற்றி வைப்பது ஆன்மீகத்தில் ஒவ்வொரு பலன்கள் சொல்லப்படுகிறது. எனவே எந்த இடத்தில் கண்ணாடி வைக்கக்கூடாது என்பதை தெளிவாக பார்க்கலாம் வாங்க..!

கடிகாரத்தை இந்த திசையில் மட்டும் மறந்தும் மாட்டிடாதீங்க

முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கக்கூடாது திசை:

வாஸ்து- 1

முகம் பார்க்கும் கண்ணாடியை படுக்கை அறையில் வைக்கக்கூடாது. ஏனென்றால் கண்ணாடி நேர்மறையான ஆற்றலை வைக்கக்கூடிய ஒன்று. ஆகவே இதனை படுக்கை அறையில் வைக்கப்பதன் மூலம் ஆரோக்கிய பிரச்சனை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

வாஸ்து- 2

முகம் பார்க்கும் கண்ணாடி வாஸ்து

வீட்டில் இருள் சூழ்ந்து இருக்கும் இடத்தில் கண்ணாடியை வைக்கக்கூடாது. அதேபோல் வீட்டிற்கு தேவைப்படாத பொருட்கள் வைத்து இருக்கும் இடத்திலேயும் கண்ணாடியை வைக்கக்கூடாது.

ஏனென்றால் இதுபோன்ற இடங்களில் வைப்பதன் மூலம் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது என்று வாஸ்துப்படி கூறப்படுகிறது.

வாஸ்து- 3

கண்ணாடி வாஸ்து

மேலும் உங்களுடைய வீட்டில் எந்த இடத்தில் கண்ணாடி வைத்தாலும் நாம் நிமிர்ந்து பார்க்கும் படி வைக்க வேண்டுமே தவிர கண்ணாடி குனிந்து பார்க்குமாறு வைக்கக்கூடாது.

ஏனென்றால் கண்ணாடியை நிமிர்ந்து பார்க்கும் படி வைப்பதன் மூலம் நமது எண்ணங்களும், வாழ்க்கையில் நமது வெற்றியும் அதேபோல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வாஸ்து- 4

அதேபோல் வீட்டு நிலைவாசலில் கண்ணாடி வைக்கும் பழக்கம் பலரது வீடுகளில் இருக்கும். இதுபோல வைப்பது வீட்டிற்கு நேர்மறையான ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

ஆனால் வீட்டிற்குள் வைக்கும் கண்ணாடி நிலை வாசலை பிரதிபலிக்கும் வகையில் ஒருபோதும் இருக்கக்கூடாது. ஆகவே இத்தகைய இடங்களில் கண்ணாடி வைப்பதை தவிர்ப்பது நல்லது.

பெண்களே தாலி கயிற்றில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement