கன்னத்தில் குழி விழுந்தால் இவ்வளவு நன்மைகளா?

Advertisement

கன்னத்தில் குழி விழும் பலன்

நண்பர்களே வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் முக்கியமான பதிவாக இருக்கும். இது பலபேருடைய கேள்வியாகவும் இருக்கிறது. உங்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் இந்த பதிவு பதிலாக இருக்கும். பொதுவாக பெண்களுக்கு கன்னத்தில் குழி விழுந்தால் அந்த பெண் மிகவும் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார்கள் என்ற கேள்வி இருக்கும். அவர்களை திருமணம் செய்யும் நபர்களும் மிகவும் அதிஷ்டசாலியாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் அது அவர்களுக்கு மட்டும் என்ன அப்படி ஒரு பலன் என்று சொல்கிறார்கள் வாங்க அதை பற்றி தெரிந்துகொள்வோம்..!

கன்னத்தில் குழி விழும் பலன்: 

கன்னத்தில் குழி விழுபவர்கள் முகம் பார்ப்பவர்கள் அனைவரையும் ஈர்க்க வைக்கும். அவர்களின் முகத்தையே அழகாக காட்டும். கன்னத்தில் குழி விழுவதற்கு சில காரணம் சொல்லப்படுகிறது அவற்றில் ஒன்று தாடையில் உள்ள சதையினாலும் கன்னத்தில் குழி விழுமாம்.

அதாவது தாடையில் ஒரு அழுத்தம் உருவாகும். அந்த இடத்தில் அழுத்தம் விழுவதால் கன்னத்தில் குழி உருவாகும். இப்படி இருக்கும் பெண்களுக்கு திருமண வாழ்க்கை சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று சாஸ்திரம் சொல்லப்படுகிறது.

திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

அப்போது விஸ்ணு புராணத்தில் குறியுள்ளதுபோல் கன்னத்தில் குழி விழும் பெண்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்கை கிடைக்கும் என்றும் அந்த பெண் திருமணத்திற்கு பிறகு கணவரின் மீது காதலும், அன்பும் அதிகமாக வைத்திருப்பார்கள். அந்த பெண்ணின் திருமண வாழ்க்கை இருவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியும் நெருக்கமும் கொண்டுவரும்.

யோகி கிரகம் சுக்கிரன்:

கன்னத்தில் குழி விழுந்தால் அவர்களுக்கு சுக்கிரனின் அருள் அதிகம் இருக்கும். சுக்கிரன் பணவரவும் ஆதிக்கம் செய்வார், அதனால் இவர்களுக்கு பணக்கஷ்டம் என்பது இவர்களுக்கு இருக்காது. மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே அளிப்பார்கள்.

வேடிக்கை மனிதர்கள்:

கன்னத்தில் குழி  விழுபவர்கள் இவர்களை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார், அதேபோல் இவர்களை சுற்றி மகிழ்ச்சியான சூழ்நிலை மட்டுமே உருவாகும். அதனால் இவர்கள் கவலையற்ற மனிதனாக இருப்பார்கள், எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக எடுத்துக்கொள்வார்கள்.

இவர்கள் வாழ்க்கையை முழுமையாக வாழவேண்டும் என்றும், எந்த குறையும் வைக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள்.

என்ன தான் இருந்தாலும் மருத்துவ ரீதியாக சொல்வது என்னவென்றால் இந்த குழந்தை கருவில் இருக்கும் போது தசைக்கான ஒரு திசு குறைவதால் கன்னத்தில் குழி விழும் என்றும் அதேபோல் ஒரே ஒரு மரபணு அதிகமா இருந்தாலும் குழி விழும் என்கிறார்கள். அல்லது தாய் தந்தை இருவரின் யாராவது ஒருவருக்கு கன்னத்தில் குழி விழுந்தாலும் அந்த குழந்தைக்கும் 50% சதவீதம் வரை கன்னத்தில் குழி விழும் என்றும் சொல்கிறார்கள்.

கன்னத்தில் குழி விழுந்தால் அந்த பெண் சிரித்தாள் அவளை சுற்றி இருக்கும் நபர்கள் அவள் சிரிப்பதையும் அந்த கன்னத்தில் குழிவிழுவதையும் பார்ப்பார்கள் அந்த அளவுக்கு ஈர்ப்பு அதிகம் இருக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉 உங்கள் நெற்றியை வைத்து நீங்கள் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement