கன்னி ராசி 2024 எப்படி இருக்கும் |  Kanni Rasi Palan 2024

Advertisement

 Kanni Rasi Palan 2024

பொதுவாக ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாள் பொழுதும் எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்வதற்கு ராசிபலனை பார்ப்பார்கள். இல்லையென்றால் காலண்டரில் தங்களின் ராசிகளுக்கான பலன்களை அறிந்து கொள்வார்கள். இப்படி அறிந்து கொள்வதால் அன்றைய நாளுக்கான பலன் படி நடந்து கொள்வார்கள். அதாவது அன்றைய நாளை ஜாக்கிரதையாக பார்த்து கொள்வார்கள்.

இப்படி ஒவ்வொரு நாள் பொழுதை பார்க்கும் பொழுது புது வருடம் பிறக்க போகிறது, அடுத்த வருடம் எப்படி இருக்க போகிறது என்று தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் கன்னி ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்வோம்.

தொழில் மற்றும் வியாபாரம்:

கன்னி ராசி 2024 எப்படி இருக்கும்

கன்னி ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆண்டு தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் யோசித்து எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் செய்யும் செயல்கள் அனைத்தையும் பொறுமையாக செய்ய வேண்டும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். அது போல நீங்கள் வியாபாரத்தில் செய்யும் செயல்களை திட்டமிட்டு செய்ய வேண்டும்.

அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். உங்களின் பணியில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

கல்வி:

நீங்கள் படித்து கொண்டிருப்பவர்களாக இருந்தால் 2024-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும். கல்வியில் ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். உங்களின் உழைப்பிற்கான அங்கிகாரம் கிடைக்கும். படிப்பில் சிறந்து விளங்குவீர்கள்.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகி கொண்டிருப்பவர்களாக இருந்தால் இந்த காலம் உங்களுக்கு சிறப்பானதாக அமையும்.

100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் கஜலட்சுமி யோகத்தால் 3 ராசிகர்களின் காட்டில் இனிமேல் அதிர்ஷ்ட மழை தான்

நிதிநிலைமை:

கன்னி ராசி 2024 எப்படி இருக்கும்

 

2024-ம் ஆண்டு மே மாதம் வரை நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்காது. அதன் பிறகு தான் கொஞ்சம் முன்னேற்றம் காணப்படும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஏதும் முதலீடு செய்வதாக இருந்தால் அதை கொஞ்சம் யோசித்து எடுக்க வேண்டும்.

நீங்கள் சம்பாதிக்கின்ற பணத்தை சேமிக்க வேண்டும் என்ற ஆற்வம் அதிகமாக காணப்படும். அப்படி நீங்கள் சேமிக்க எடுத்து முதலீடு திட்டங்களை பற்றி நன்றாக அறிந்த பிறகு சேமிக்க வேண்டும்.

குடும்பம்:

அடுத்த ஆண்டு கன்னி ராசிக்காரர்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பதற்ற நிலை காணப்படும். மேலும் சண்டைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தாயின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்ப்டுவதால் அக்கறை செலுத்த வேண்டும்.

உங்களின் உடன் பிறந்தவர்கள் உங்களின் எல்லா செயல்களிலும் பக்க பலமாக இருப்பார்கள். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மேலும் உங்கள் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படும். அதனால் அவ்வப்போது விட்டு கொடுத்து செல்வது நல்லது.  ஜூலை மாத்திற்கு பிறகு உங்களிடம் நல்லுறவு நீடிக்கும்.

குழந்தை இல்லா தம்பதிகளுக்கு குழந்தை வரன் கிடைக்கும், குழந்தைகள் ஆசைப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியில் சேர்ப்பீர்கள்.

2024 ஆம் ஆண்டு சனி பகவானின் அருளால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை சும்மா தாறுமாறாக மாற போகுது

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement