ஐயப்பன் கன்னிமாரே கன்னிமாரே பாடல் வரிகள்..!

Advertisement

கன்னிமாரே கன்னிமாரே பாடல் வரிகள் | Kannimare Kannimare Song Lyrics In Tamil

ஐயப்பன் பக்தர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் கன்னிமாரே கன்னிமாரே பாடல் வரிகள் தான் பார்க்கப்போகிறோம். சபரிமலைக்கு முதல் தடவை மாலை அணியும் பக்தர்களை தான் கன்னிசாமி என்று கூறுவார்கள்.மாலை அணிந்திருக்கும் பக்தர்கள் அனைவரும் தினமும் காலை மாலை பூஜை செய்து ஐயப்பனை வழிபடுவார்கள்.கன்னிசாமிகள் சபரிமலைக்கு செல்லும் முன்பு வீட்டிலோ அல்லது கோவில்களிலோ கன்னிபூஜை செய்வார்கள்.

கன்னிபூஜை செய்யும் பக்தர்களுக்காகவே கன்னிமாரே கன்னிமாரே பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுத்துள்ளோம்.இந்த பாடல் வரிகளை பாடி ஐயப்பன் சாமிக்கு பூஜை செய்து ஐயப்பனை வழிபடுங்கள்.கன்னிமாரே கன்னிமாரே பாடல் வரிகள் பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

ஐயப்பன் மந்திரங்கள்.!

Kannimare Kannimare Song Lyrics In Tamil:

கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே

நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவோம் கன்னிமாரே

நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவொம் கன்னிமாரே

கோட்டையாளும் சாமியக் காண நாங்க

பேட்ட துள்ளி கூடிப் போகலாங்க

ஐயனோட அருள வாங்க தாங்க நாங்க

காடுமலை ஏறிப் போவோம் வாங்க

ஐயனோட அருள வாங்க தாங்க நாங்க

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

 

கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே

நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவோம் கன்னிமாரே

நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவொம் கன்னிமாரே

கோட்டையாளும் சாமியக் காண நாங்க

பேட்ட துள்ளி கூடிப் போகலாங்க

ஐயனோட அருள வாங்க தாங்க நாங்க

காடுமலை ஏறிப் போவோம் வாங்க

ஐயனோட அருள வாங்க தாங்க நாங்க

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

 

வேலி விட்டு பாயும் வெள்ளாட்டப்போல்

வேலி விட்டு பாயும் வெள்ளாட்டப்போல்

கட்டுப்பாடு இல்லாமத்தான் நாமிருந்தோம்

நாலு பத்து நாளும் கட்டுப்பட்டோம்

நாலு பத்து நாளும் கட்டுப்பட்டோம்

ஆஸா பாசம் அம்புட்டயும் கட்டி வச்சோம்

சாமிய பாக்கவும் வேதன தீக்கவும்

ஜோதிய பாக்கவும் பாவத்த போக்கவும்

சேந்தது வந்து சேந்தது அந்த நாளும் வந்து சேந்தது

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

(கன்னிமாரே கன்னிமாரே…)

 

வேண்டிகைய்யா நீயும் வேண்டிகைய்யா

வேண்டிகைய்யா நீயும் வேண்டிகைய்யா

மஞ்ச நிரம்பிய அம்பலம் வந்து வேண்டிகைய்யா

காணிக்கையா நீயும் காணிக்கையா

காணிக்கையா நீயும் காணிக்கையா

மஞ்ச துணி தேங்கா குங்குமம் தந்திடைய்யா

சரங்க்குத்தி ஆலிலே சரம் ஒண்ணு போடய்யா

தேங்கா உருட்டியே தேவைய கேளைய்யா

அந்த மாதா மஞ்ச மாதா உன்ன

காக்க கருண காட்டுவா

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

(கன்னிமாரே கன்னிமாரே…)

ஐயப்பன் சுப்ரபாதம் பாடல் வரிகள்.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement