சாமியே ஐயப்போ…..சரணம் ஐயப்பா
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பலவகையான கஷ்டங்கள் ஏற்படும். அவ்வற்றையெல்லாம் நாம் கடந்து வர நமது மனதில் அதிக அளவு நம்பிக்கை தேவைப்படுகிறது. அப்படி நமக்கு தேவைப்படும் தன்னம்பிக்கையை நமக்கு அளிப்பது நமது மனதில் உள்ள கடவுள் நம்பிக்கை தான். அப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளின் மீது நம்பிக்கை உண்டு. அப்படி நம்மில் பலரின் மனதிலும் இடப்பிடித்துள்ள கடவுள்களில் ஒருவர் தான் ஐயப்பன். இவரின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது என்பது மிக மிக எளிமையான ஒன்றாகும். அதாவது இவருக்கு மனமார பூஜை செய்ய வேண்டும் அப்படி நாம் பூஜை செய்யும் பொழுது நாம் அவரின் ஸ்லோகம், சரணம், பாடல் போன்றவற்றை கூற வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் கன்னிமூல கணபதியை வேண்டிக்கிட்டு பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம்.
Kannimoola Ganapathiyai Vendikittu lyrics in Tamil:
கன்னிமூல கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க
கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்
(கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்)
ஐயப்பா ஐயப்பா என்றே சொல்லி நாங்க
ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம்
(நாங்க ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம்)
குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டு
இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா
(இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா)
ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டு
யாத்திரையாக வந்தோமைய்யா
(நாங்க யாத்திரையாக வந்தோமைய்யா)
கன்னிமூல கணபதியை வேண்டிக்கிட்டு பாடல்:
குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி வரை
தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா
(நாங்க தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா)
எருமேலி பேட்டை துள்ளி வாவரையே வேண்டிக்கிட்டு
பேரூர் தொட்டில் பொரி போட்டு வந்தோமய்யா
(பேரூர் தொட்டில் பொரி போட்டு வந்தோமய்யா)
காளை கட்டி அஞ்சல் வந்து அளுதாமலை ஏறிக்கிட்டு
கரிமலையின் உச்சியிலே வந்தோமய்யா
(கரிமலையின் உச்சியிலே வந்தோமய்யா)
சாமியே ஐயப்போ…..சரணம் ஐயப்பா:
பம்பையிலே குளித்துவிட்டு பாவங்களைத் தொலைத்துகிட்டு
பம்பையிலே குளித்துவிட்டு பாவங்களைத் தொலைத்துகிட்டு
நீலிமலை ஏறிக்கிட்டு வந்தோமய்யா
நீலிமலை ஏறிக்கிட்டு வந்தோமய்யா
பதினெட்டாம் படிதாண்டி பகவானே உனைவேண்டி
கற்பூர ஜோதிதனைக் கண்டோமய்யா
(கற்பூர ஜோதிதனைக் கண்டோமய்யா)
மகர ஜோதியைக் கண்டு மனமார சரணம் போட்டு
மணிகண்டா உன் மகிமை அறிந்தோமய்யா
சாமியே சரணம், ஐயப்பா சரணம், ஸ்வாமியே சரணம் சரணம் ஐயா….
சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் ஐயா….
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே… சரணம் ஐயப்பா
சபரிமலை ஐயப்பனின் திருப்புகழை சொல்லும் வில்லாளி வீரனே வீரமணிகண்டனே பாடல் வரிகள்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |