காரடையான் நோன்பு தேதி மற்றும் நேரம் 2024

Advertisement

Karadaiyan Nombu 2024 Date and Time in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காரடையான் நோன்பு தேதி மற்றும் நேரம் 2024 பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. காரடையான் நோன்பு தமிழ் மாதமான மாசி மாதம் முடிந்து பங்குனி மாத தொடக்கத்தில் வருகிறது. அதாவது, மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவதுதான் காரடையான் நோன்பு. காரடையான் நோன்பு ஆனது, சாவித்திரி நோன்பு விரதம் என்று அழைக்கப்படுகிறது.

காரடையான் நோன்பை பெண்கள் தவறாமல் பின்பற்றி வருவார்கள். திருமணமான பெண்கள் தங்கள் கணவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என்று வேண்டி பெண்கள் காரடையான் நோன்பு மேற்கொள்வார்கள். தமிழ்நாட்டில் காரடையான் நோன்பு திருமணமான பெண்களுக்கான ஒரு திருவிழா என்றே கூறலாம். எனவே, இந்த ஆண்டு காரடையான் நோன்பு எப்போது எந்த நேரத்தில் வருகிறது என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

காரடையான் நோம்பு திருவிழா நேரம் 2024:

 காரடையான் நோன்பு 2024

ஆண்டு  தேதி 
2024  மார்ச் 14.04.2024, வியாழன்கிழமை 
 காரடையான் நோன்பு 2024 ஆம் ஆண்டில் மார்ச் 14 ஆம் தேதி வியாழன் அன்று (தமிழில், பங்குனி 01 ஆம் தேதி) வருகிறது.  

காரடையான் நோம்பு சுப முஹூர்த்தம்:

 காரடையான் நோம்பு விரதம் இருப்பவர்கள் காலை 06:35 AM முதல் 12:46 PM பிற்பகல் வரை இருக்கலாம்.   நோன்பு காலம் 6 மணி நேரம் 11 நிமிடம் ஆகும்.

மஞ்சள் சரடு முகூர்த்தம் மதியம் 12:46 PM ஆகும்.

காரடையான் நோன்பு ஸ்லோகம்

காரடையான் நோன்பு:

காரடையான் நோன்பு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், திருமணம் ஆன பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுள் பெற இறைவனை பிராத்தனை செய்யும் முறை ஆகும். அதேசமயம் திருமணமாகாத பெண்களும் தங்கள் வருங்கால கணவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இதை கடைபிடிக்கின்றனர். முக்கியமாக பெண்கள் இந்த நாளில் கடுமையாக விரதம் இருந்து வழிபடுவார்கள். காரடையான் நோன்பு கொண்டாடப்படுவதற்கு வரலாற்று காரணம் ஒன்று உள்ளது. அதனை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement