Karadaiyan Nombu 2026 Date and Time in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2026 ஆம் ஆண்டில் காரடையான் நோன்பு (Karadaiyan Nombu 2026 Date and Time in Tamil) எப்போது வருகிறது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். காரடையான் நோன்பு என்பது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான நோன்பு ஆகும். ஆனால், இது பற்றி பலருக்கும் தெரிவதில்லை.
காரடையான் நோன்பு என்பது, பெண்கள் காமாட்சி அம்மனை வழிபட்டு நோன்பினை கடைப்பிடிக்கும் முறையாகும். காரடையான் நோன்பினை சாவித்ரி நோம்பு , காமாட்சி விரதம், கவுரி விரதம் என பல வகைகளில் அழைப்பார்கள். காரடையான் நோன்பு மேற்கொண்டால் கணவனின் ஆயுள் நீட்டிக்கப்படும் என ஐதீகம். இத்தனை சிறப்புகள் கொண்ட காரடையான் நோன்பு 2026 -ல் எப்போது வருகிறது.? பெண்கள் தாலி கயிற்றை எந்த நேரத்தில் மாற்றி கொள்ளலாம் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். படித்து தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
காரடையான் நோன்பு தேதி மற்றும் நேரம் 2026:
காரடையான் நோன்பு மாசி மாதம் கடைசி நாள் இரவு தொடங்கப்பட்டு பங்குனி மாதம் முதல் நாள் நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டு 2026 காரடையான் நோன்பு ஆனது, மார்ச் 14 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது.இந்நாளில் திருமணமான சுமங்கலி பெண்கள், அவர்களின் கணவன் நீண்ட ஆயுளுக்காக வேண்டிக் கொண்டு தாலிச்சரடு மாற்றிக் கொள்வார்கள்.

திருமணம் ஆகாத பெண்கள், தனக்கு பிடித்த மணவாளனை மணமுடிக்க வேண்டியும், நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்று கைகளில் மஞ்சள் நிற கயிறு கட்டி கொள்வார்கள்.
காரடையான் நோன்பு என்பது, காலையில் சூரியன் உதயம் துவங்கி, மாலையில் சூரியன் அஸ்தமனம் வரை கடைபிடிக்கப்படும்.
எனவே, மார்ச் 14 ஆம் தேதி அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சூரியன் உதிக்கும் நேரத்தில் விரதத்தினை துவங்க வேண்டும். அதே போல் மாலை சூரிய அஸ்தமன் ஆகும் நேரத்தில் விரதத்தினை நிறைவு செய்து கொள்ளலாம். தாலி சரடு மாற்றி கொள்பவர்கள் நோன்பு முகூர்த்தமான மாலை 05.30 மணிக்கு மேல் 6:25 மணிக்குள் மாற்றி கொள்வது நல்லது.
Karadayan Nonbu 2026 Timings in Tamil:

| சூரிய உதய நேரம் | மார்ச் 14, 2026 காலை 6:40 AM |
| சூரிய அஸ்தமன நேரம் | மார்ச் 14, 2026 மாலை 6:31 PM |
| காரடையான் நோம்பு விரதம் நேரம் | மார்ச் 14, காலை 6:25 AM முதல் மார்ச் 15 அதிகாலை 01:08 AM வரை |
| மஞ்சள் சரடு முகூர்த்த நேரம் | மார்ச் 15, 2026 அதிகாலை 01:08 AM |
காரடையான் நோன்பு அன்று சொல்ல வேண்டிய மந்திரம்..!
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |













