Karadaiyan Nombu Mantra in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். காரடையான் நோன்பு பற்றி நம் அனைவருக்குமே தெரியும். திருமணம் ஆன பெண்கள் அனைவரும் கணவருக்கு நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் தர வேண்டும் என்ற காரடையான் நோன்பு தினத்தில் இறைவனை பிராத்தனை செய்வது வழக்கம். இவ்வுலகில் ஒவ்வொரு பெண்ணுக்கும் எல்லாமுமாக இருப்பது அவர்களின் கணவர் தான். ஆகையால், Karadaiyan Nombu அன்று பெண்கள் அவர்களின் நலனுக்காக வழிபடுவார்கள் .
காரடையான் நோன்பு பல பூஜைகள் நடைபெறும். அப்போது, பெண்கள் தாலிக்கயிறு கட்டிக் கொள்வார்கள். அப்போது, பெண்கள் கட்டயமாக காரடையான் நோன்பு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, காரடையான் நோன்பு இருக்கும் பெண்களுக்கு பயனுள்ள வகையில், அவர்கள் சொல்லக்கூடிய காரடையான் நோன்பு மந்திரம் பற்றி இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
காரடையான் நோன்பு மந்திரம்:
தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே!
ஸஹாரித்ரம் தராம்யஹம்!
பர்த்து; ஆயுஷ்ய ஸித்யர்த்தம்!
ஸுப்ரீதா பவ ஸர்வதா.
மந்திரம் பொருள்:
உருக்காத வெண்ணையும் ஒரடையும் நான் தருவேன்,
ஒரு நாளும் என் கணவரை பிரியாத வரம் தருவாய்!
உருகாத வெண்ணெய்யும்,
ஓரடையும் நான் செய்தேன்,
ஒருகாலும் என் கணவர்
என்னை விட்டு பிரியாத வரம் வேண்டும் – இந்த மந்திரத்தை கயிறு கட்டிக்கொள்ளும்போது சொல்ல வேண்டும். அம்பாளை நினைத்து வேண்டிக்கொண்டு அம்பாள் ஸ்லோகம் சொல்லவேண்டும். மேலும், காரடையான் நோன்பு அன்று காமாட்சி விருத்தம் படிப்பது மிகவும் நல்லது.
காரடையான் நோன்பு:
பங்குனி முதல் நாளில், பெண்கள் காரடையான் நோன்பு மேற்கொள்வார்கள்.
தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே!
ஸஹாரித்ரம் தராம்யஹம்!
பர்த்து; ஆயுஷ்ய ஸித்யர்த்தம்!
ஸுப்ரீதா பவ ஸர்வதா.
இது அம்பாளுக்குரிய மந்திரம் ஆகும். அம்பாளிடம் ஒவ்வொரு சுமங்கலி பெண்ணும் தன் கணவரின் ஆயுளை வேண்டி வணங்குவார்கள். அப்போது, அம்பாளை நினைத்து கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும்.
அன்றைய நாளில் வயது முதிர்ந்த சுமங்கலி பெண்களிடம் புதிதாக திருமணம் ஆன அல்லது சிறிய வயதில் உள்ள சுமங்கலி பெண்கள் சரடு அணிந்து கொள்வது நல்லது. திருமணம் ஆகாத பெண்களும் அன்றைய தினத்தில் சரடு கட்டிக் கொள்வதன் மூலம் நல்ல மண வாழ்க்கை அமையும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |