கரிநாள் என்றால் என்ன. ?

Advertisement

Karinaal Meaning In Tamil

காலண்டரில் பல்வேறு நாட்களின் பெயர்களை பார்த்திருப்போம். அந்த எல்லா நாட்களுக்கும் நமக்கு அர்த்தம் தெரியாவிடிலும் ஓரளவுக்கு தெரியும். ஆனால் காலண்டரில் கரிநாள் என்று சில தினங்களில் ஹைலைட் பண்ணி இருக்கும். அப்படி அந்த கரிநாள் என்றால் என்ன என்பது நிறைய பேருக்கு தெரியாது. கரிநாள் நல்லதா இல்லை கெட்டதா என்பதும் பலருக்கும் குழப்பமாக இருக்கும். இந்த பதிவில் கரிநாள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கரிநாள் விளக்கம் 

karinal in tamil

கரிநாள் என்பது சராசரி நாட்களில் இருக்கும் சூரிய கதிர்வீச்சின் வெப்பத்தை காட்டிலும் இந்த கரிநாள் அன்று சூரியனின்  தீட்சண்யம் அதிகமாக இருக்கும். அதாவது அன்றைய நாள் சூரியனின் வெப்பம் அதிகமாக இருக்கும். கரிநாள் என்றால் நஞ்சு என பொருள்படும். அந்த நாளில் சூரியன் அதிக வெப்பத்தை செலுத்துகிறது. இதனால் அந்த நாளில் வெளியில் நாம் செல்லும்போது உடல் மிகவும் சோர்வாக காணப்படும். இதனால் மன நிலையும் மாறுபடும். அதனால் தான் இந்த நாளில் சுப காரியங்களை தள்ளி வைப்பார்கள்.

நம் முன்னோர்கள் முன்னாதாகவே இந்த கரிநாளை கணித்து வைத்து இருக்கிறார்கள். இந்த கரிநாள் வருடத்தின் எல்லா நாட்களும் ஒரே நாட்களில் தான் வருகிறது. வருடத்திற்கு வருடம் மாறுபடுவதில்லை.

மாதத்தின் கரிநாட்களின் விபரம் :

  • சித்திரை-6,15
  • வைகாசி- 7, 16, 17
  • ஆனி- 1, 6
  • ஆடி-2, 10, 20
  • ஆவணி-2, 9, 28
  • புரட்டாசி- 16, 29
  • ஐப்பசி-6, 20
  • கார்த்திகை-1, 10, 17
  • மார்கழி-6, 9, 11
  • தை-1, 2, 3, 11, 17
  • மாசி-15, 16, 17
  • பங்குனி-6, 15, 19

இந்த கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை தள்ளி வைப்பதன் நோக்கம் வெயிலில் நல்ல காரியங்களை வைத்தால் பல உடல் உபாதைகள் வரும் என்பதற்காகத்தான்.

சூரிய கிரகணம் 2024 எப்போது நிகழும்.? தமிழ்நாட்டில் தெரியுமா.?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement