கரிநாள் பலன்கள் மற்றும் கரிநாள் 2021 | Kari Naal days 2021
பொதுவாக நாம் நம் வீட்டில் சுபகாரியங்களை செய்வதற்கு முன் அன்றைய நாள் நல்ல நாளா என்பதை நாம் காலண்டரில் பார்க்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்கிறது. அப்படி நாம் காலண்டரை பார்க்கும் போது, அந்த காலண்டரில் கரிநாள் என்று இருக்கும். அந்த நாளில் யாரும் எந்த ஒரு சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். இதற்கு என்ன காரணம் என்றால்?
Kari Naal Palangal in Tamil:- கரிநாளில் சூரியனின் வெப்பமானது அதிகமாக இருக்கும். சூரியனின் கதிர்வீச்சின் தாக்கம் பூமியில் அதிகமாக விழுவதால் நம் உடலின் இயக்கமானது வழக்கத்திற்கு மாறாக செயல்படும்.
அதாவது ஹார்மோன்கள் சராசரி அளவை விட அதிகமான அளவில் சுரக்கும், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும், இதனால் இரத்த கொதிப்பு அதிகரிக்கும், சாதாரணமாக இருக்கும் போதே நமக்கு நிறைய பிரச்சனைகள் வரும்.
இதனோடு வீட்டில் சுப விசேஷங்களையும் வைத்துக் அதன் மூலம் நமக்கு ஏற்படும் வேலை மற்றும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். அந்த வேலைகளை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்ற நம்முடைய மன அழுத்தமே நம்மை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தி விடும்.
மனிதர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். இதனால் விசேஷங்களில் பிரச்சனைகள் மேலோங்கும். சுப காரியம் என்பது நல்லது நடப்பதற்காக தானே! அந்த சுப காரியத்தில் பிரச்சனைகள் வந்தால் அதை அபசகுணமாக கருத மாட்டார்களா? இதன் காரணமாகவே கரிநாளில் நல்ல காரியங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். எனவே உங்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால் கரிநாட்களில் முடிந்த வரை வைக்க வேண்டாம். சரி 2021-ம் ஆண்டு கரிநாள் எப்போது எல்லாம் வருகிறது என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் –> | Amavasai Date 2021 |
Kari Naal days 2021:-
நாள் | கிழமை |
ஜனவரி மாத கரிநாள் | |
14.01.2021 | வியாழன் கிழமை |
15.01.2021 | வெள்ளி கிழமை |
16.01.2021 | சனி கிழமை |
24.01.2021 | ஞாயிறு கிழமை |
30.01.2021 | சனி கிழமை |
பிப்ரவரி மாத கரிநாள் | |
27.02.2021 | சனி கிழமை |
28.02.2021 | ஞாயிறு கிழமை |
மார்ச் மாத கரிநாள் | |
01.03.2021 | திங்கள் கிழமை |
19.03.2021 | வெள்ளி கிழமை |
28.03.2021 | ஞாயிறு கிழமை |
ஏப்ரல் மாத கரிநாள் | |
01.04.2021 | வியாழன் கிழமை |
19.04.2021 | திங்கள் கிழமை |
28.04.2021 | புதன் கிழமை |
மே மாதம் கரிநாள் | |
21.05.2021 | வெள்ளி கிழமை |
30.05.2021 | ஞாயிறு கிழமை |
31.05.2021 | திங்கள் கிழமை |
ஜூன் மாத கரிநாள் | |
15.06.2021 | செவ்வாய் கிழமை |
20.06.2021 | ஞாயிறு கிழமை |
ஜூலை மாத கரிநாள் | |
18.07.2021 | ஞாயிறு கிழமை |
26.07.2021 | திங்கள் கிழமை |
ஆகஸ்ட் மாத கரிநாள் | |
05.08.2021 | வியாழன் கிழமை |
18.08.2021 | புதன் கிழமை |
செப்டம்பர் மாத கரிநாள் | |
13.09.2021 | திங்கள் கிழமை |
அக்டோபர் மாத கரிநாள் | |
15.10.2021 | வெள்ளி கிழமை |
23.10.2021 | சனி கிழமை |
நவம்பர் மாத கரிநாள் | |
06.11.2021 | சனி கிழமை |
17.11.2021 | புதன் கிழமை |
22.11.2021 | திங்கள் கிழமை |
26.11.2021 | வெள்ளி கிழமை |
டிசம்பர் மாத கரிநாள் | |
03.12.2021 | வெள்ளி கிழமை |
21.12.2021 | செவ்வாய் கிழமை |
24.12.2021 | வெள்ளி கிழமை |
26.12.2021 | ஞாயிறு கிழமை |
இதையும் படியுங்கள் –> | 2021 ஆண்டிற்கான பௌர்ணமி நாட்கள் நேரம் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |