Karma 9 Rules in Tamil – கர்மா என்றால் என்ன?
கர்மா (Karma) அல்லது வினைப்பயன் என்பது ஒருவரின் தற்போதைய மற்றும் முந்தைய ஜென்மத்தில் செய்த செயல்களின் கூட்டுத்தொகையாகும், இது எதிர்கால இருப்பில் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறது. கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும்.
இந்து மற்றும் சார்ந்த சமயங்களில் கர்மம் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து, பௌத்தம் மற்றும் சமண சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு ‘கர்மா’ என்று சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் ”வினைப்பயன்” என்றும் கூறுவர்.
கர்மா 9 விதிகள் – Karma 9 Vithigal in Tamil:
மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்ப, துன்பங்கள் நாம் செய்த கர்ம வினைகளின் படியே அமைகின்றன என்பது இந்துமதம் போதிக்கும் ஒரு செய்தியாகும்.
அந்த கர்மாவில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள, ஒன்பது வகையான விதிகளை பின்பற்றி நடந்தாலே போதுமானது. அது என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
முதல் விதி:-
இந்த பிரபஞ்சத்தில் நாம் எதைச் செய்தாலும் அது நமக்கே திரும்பி வந்துசேரும். அதாவது நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது நடக்கும்.
இரண்டாம் விதி:-
வாழ்வில் எதுவும் அதுவாக நடப்பதில்லை. நமக்குத் தேவையானதை நாம்தான் நடத்திச் செல்ல வேண்டும். நீ எண்ணியதை அடைய இலக்கை நோக்கி விடா முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
மூன்றாம் விதி:-
சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும்.
நான்காம் விதி:-
நம்மை நாம் மாற்றிக்கொள்ளும் போது, நம் வாழ்க்கையும் நம்மை பின் பற்றி மாறும்.
ஐந்தாம் விதி:-
நம் வாழ்க்கையில் நடப்பவற்றிற்கு நாமே பொறுப்பு என்பதை உணர வேண்டும்.
ஆறாம் விதி:-
நேற்று, இன்று, நாளை ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.
ஏழாம் விதி:-
ஒரு சமயத்தில் இருவேறு விஷயங்களைப் பற்றி சிந்திக்க முடியாது.
எட்டாம் விதி:-
நம் நடத்தை நமது சிந்தனையையும், செயலையும் பிரதிபலிக்க வேண்டும்.
ஒன்பதாம் விதி:-
நம்முடைய முன்காலத்தையே நாம் பார்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய நிகழ்காலம் நம்மை விட்டுப் போய்விடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கண் திருஷ்டி சுத்தி போடுவது எப்படி.?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |