கர்மா அர்த்தம் | Karma Tamil Meaning
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நாம் இந்த பதிவில் முக்கியமான ஒரு வார்த்தையை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். கர்மா என்றால் என்ன என்பது சிலருக்கு தெரியாது. பலர் இதனை தவறாக புரிந்துகொள்கிறார்கள். இந்த வார்த்தை அபசகுணம் என்று சொல்வார்கள். ஆனால் அது தவறான கருத்து. இன்று இந்த பதிவில் கர்மா என்றால் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்துகொள்வோம்.
கர்மா என்றால் என்ன? Karma Endral Enna?
கர்மா என்றால் வினை பயன். ஒருவர் செய்யும் செயலில் இருக்கும் கர்மம் அல்லது வினை பயன். ஒருவர் செய்யும் செயலில் நன்மையும் இருக்கும் அல்லது தீமையும் இருக்கும். அதனை தீர்மானிப்பது கர்மவினை. இதுவே கர்மா என்று குறிப்பிடுகிறார்கள். இதில் முன்று பிரிவுகள் இருக்கிறது சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம்.
கர்மா வகைகள்:
- சஞ்சித கர்மம் (சேமித்த வினைப்பயன்)
- பிராரப்த கர்மம் (செயல்படுகின்ற வினைப்ப்யன்)
- ஆகாமிய கர்மம் (வர இருக்கின்ற வினைப்பயன்)
நீங்கள் முன்ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள்? இத படிங்க..! |
- சஞ்சித கர்மம் (சேமித்த வினைப்பயன்): பலகோடி மனுஷ பிறவிகளில் ஒரு ஆன்மா நல்வினை, தீவினை சேர்த்து தருவது சஞ்சித கர்மம் என்பார்கள்.
- ஒவ்வொரு ஆன்மாவும் போன ஜென்மத்தில் தீராத ஆசை பகையை இந்த பிரிவில் வாழ்ந்து அனுபவிப்பது பிராரப்த கர்மம் என்பார்கள். இது சஞ்சித கர்மாவின் ஒரு சின்ன பகுதியாகும்.
- ஆகாமிய கர்மம் (வர இருக்கின்ற வினைப்பயன்): ஒவ்வொரு ஆன்மாவும் இந்த பிறவியில் புதிதாக சேர்க்கும் நல்வினை தீவினையின் தொகுப்பு ஆகும்.
கர்மா தத்துவம் | Karma Quotes in Tamil:
- எந்த செயலும் தற்செயலாக நடக்காது
நீங்கள் செய்த செயலால்
உங்கள் விதியால் உருவாகும்.
கர்மா அர்த்தம்:
- நீ விதைத்த விதையை
நீயே அறுவடை செய்வாய். - நீ கடவுளை தினமும் கும்பிட்டாலும்
நீ விதைத்த வினைக்கு
கர்மாவின் பலன்களை அனுபவித்தே ஆக வேண்டும்.
கர்மா தத்துவம்:
- நாம் அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடுவதை
நாம் மறந்தாலும் கர்மா மறப்பதில்லை
நாம் வாழும் காலங்களில்
ஏதோ ஒரு நிமிடத்தில்
அதனை நமக்கு உணர்த்தும்.
கர்மா அர்த்தம்:
- நீ அடுத்தவனை அழிக்க நினைத்தால் உன்னை அழிக்க கர்மா வந்து கொண்டிருப்பான்.
- கர்மா ஒரு பூமராங் போன்றது
நீங்கள் எதை கொடுக்கிறீர்களோ
அது தான் நமக்கு பிறகு கிடைக்கும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |