கர்ம நட்சத்திரம் என்றால் என்ன..! | Karma Natchathiram Endraal Enna In Tamil..!

Advertisement

கர்ம நட்சத்திரம் என்றால் என்ன..! | Karma Natchathiram Endraal Enna In Tamil..!

இன்றைய பதிவில் கர்ம நட்சத்திரம் என்றால் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். நாம் வாழ்வில் நடக்க கூடிய நல்ல விஷயங்கள் மற்றும் கெட்ட விஷயங்கள் அனைத்தும் நம் ராசிகள் மற்றும் நட்சத்திரங்களின் கர்ம வினை தான். நம் ராசியின் கட்டத்தை வைத்து தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது.

இந்த பதிவில் எந்த நட்சத்திரங்கள் கர்ம நட்சத்திரங்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள். ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு கர்ம நட்சத்திரம் உள்ளது. கர்மா நட்சத்திரம் என்றால் என்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

கர்மா அர்த்தம் | Karma Tamil Meaning

கர்ம நட்சத்திரம் என்றால் என்ன?

கர்ம நட்சத்திரம் என்றால் நம் முன்னோர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுடைய பலன்களை பிள்ளைகள் தான் அனுபவிக்கிறார்கள். 12 ராசியில் இருக்க கூடிய 14 கர்ம நட்சத்திரங்களில் இருக்க கூடிய கிரகங்களே நம்மை வழி நடத்துகிறது. கர்ம நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், முந்தைய பிறவிகளில் செய்த கர்மா கடனை அடைக்கப் பிறந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

கர்மா என்பது ஒருவர் தற்போதைய மற்றும் முந்தைய ஜென்மங்களில் செய்த பாவ புண்ணியங்களுடைய பலன்களை அனுபவிக்கும் காலம் தான் கர்மா. இது எதிர்கால இருப்பில் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறது. ஜாதகத்தில், மூன்றாவது நட்சத்திரத்தில் நிற்கும் கிரகங்களாலேயே ஒருவருக்கு கர்மா பற்றிய அளவுகோல் தெரியவரும்.

கர்ம நட்சத்திரத்தில் நிற்க கூடிய கிரகம் அந்த திசையை இயக்கும். குரு திசை, ராகு திசை, கேது திசை எந்த ஒரு திசையாக இருந்தாலும் அந்த கிரகம் நமக்கு நன்மை செய்ய கூடிய அமைப்பில் தான் இருக்கிறது என்றாலும், அந்த கிரகம் கர்ம நட்சத்திரத்தில் நிற்கும் பொழுது கர்ம நட்சத்திரத்துடைய வேலையை தான் செய்யும் அந்த கிரகத்தால் நமக்கு நன்மை செய்ய இயலாது. கிரகம் தன்னுடைய சுய நட்சத்திரத்தில் நின்றால் கூட அது கர்ம நட்சத்திரத்தில் இருந்தால் கிரங்களால் நன்மை இயக்க முடியாது. கிரகங்கள் அனைத்தும் கர்ம  நட்சத்திரத்தில் தான் இயங்கும்.

கர்ம நட்சத்திரங்கள் எவை:

  • மேஷ ராசி மண்டலத்தில் அஷ்வினி நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் ஆகும்.
  • ரிஷப ராசி மண்டலத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் ஆகும்.
  • மிதுன ராசி மண்டலத்தில் திருவாதிரை நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் ஆகும்.
  • கடக ராசி மண்டலத்தில் ஆயில்யம் நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் ஆகும்.
  • சிம்ம ராசி மண்டலத்தில் பூரம் நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் ஆகும்.
  • கன்னி ராசி மண்டலத்தில் அஸ்தம் நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் ஆகும்.
  • துலாம் ராசி மண்டலத்தில் சித்திரை நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் ஆகும்.
  • விருச்சிக ராசி மண்டலத்தில் அனுஷம் நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் ஆகும்.
  • தனுசு ராசி மண்டலத்தில் மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங்கள் கர்ம நட்சத்திரம் ஆகும் ஏனென்றால் தனுசு ராசி கருவூல ராசி என்று சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.
  • மகரம் ராசி மண்டலத்தில் அவிட்டம் நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் ஆகும்.
  • கும்பம் ராசி மண்டலத்தில் பூரட்டாதி நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் ஆகும்.
  • மீனம் ராசி மண்டலத்தில் உத்திரட்டாதி நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் ஆகும்.

கிரகங்கள் வழி கர்ம நட்சத்திரங்கள்:

  • சூரியன் கர்ம நட்சத்திரங்கள் அஷ்வினி, ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி.
  • சந்திரன் கர்ம நட்சத்திரங்கள் பரணி, மகம், கேட்டை, உத்திரட்டாதி.
  • செவ்வாய் கர்ம நட்சத்திரங்கள் கார்த்திகை, பூரம், மூலம், ரேவதி.
  • குரு கர்ம நட்சத்திரங்கள் மிருகசீரிடம், அஸ்தம், உத்திரட்டாதி.
  • புதன் கர்ம நட்சத்திரங்கள் ரோகிணி, உத்திரம், பூராடம்.
  • சுக்கிரன் கர்ம நட்சத்திரங்கள் திருவாதிரை, சித்திரை, திருவோணம்.
  • சனி கர்ம நட்சத்திரங்கள் புனர்பூசம், சுவாதி, அவிட்டம்.
  • ராகு கர்ம நட்சத்திரங்கள் பூசம், விசாகம், சதயம்.
  • கேது பகவான் மோட்ச காரகன் என்பதால் கேதுவின் தோஷம் எந்த நட்சத்திரத்துக்கும் இல்லை.

கர்ம நட்சத்திரத்தின் விளைவுகள்:

12 ராசி மண்டலத்தில் உள்ள 14 கர்ம நட்சத்திரங்கள் நாம் எப்படி வாழனும் நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களின் பலன்களை அனுபவிக்க வைக்கும். கிரகங்கள் மொத்தம் 9 தான் இந்த 9 கிரகங்களில் அதிகபட்சமான கிரங்கங்கள் கர்ம நட்சத்திரத்தில் நின்றால் அந்த நபரின் முன்னோர்கள் அதிக தவறுகளை செய்திருப்பார்கள். அந்த கிரகத்தின்படி அந்த நபர் துன்பத்தில் தான் இருப்பார்கள்.

7 ஆம் இடத்துக்குண்டான அதிபதி கர்ம நட்சத்திரத்தில் நின்றால் திருமணம் சம்பத்தப்பட்ட செயல்களில் பாதிப்பு ஏற்படும். 10 ஆம் இடத்துக்குண்டான அதிபதி கர்ம நட்சத்திரத்தில் நின்றால் அந்த கர்ம நட்சத்திரத்தின் சாபத்தை தான் அது இயக்கும். கர்ம நட்சத்திரம் செயல்பட்ட பிறகு தான் அது யோகாதிபதியாக மாறி செயல்படும்.

 Karma 9 Rules in Tamil – கர்மா என்றால் என்ன? 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement