Karpanai Endralum Song Lyrics
முருகனை பெருமாளை பற்றியும் சொல்வதற்கு எண்ணற்ற சிறப்புகள் இருக்கிறது. என்ன தான் இவர் சிவன் பார்வதியின் பிள்ளையாக இருந்தாலும் கூட இவர்களுக்கு இணையாக பேசப்படும் வகையில் பல புகழை இவர் பெற்று இருக்கிறார். அதிலும் குறிப்பாக இவரது ஆறுபடை வீடுகளிலும் இருந்து மக்களுக்கு அருள் புரிகிறார் என்பது மற்றொரு சிறப்பாக மக்கள் கருதப்படுகிறது. ஆகவே முருகனை நினைத்து வழிபடுவோரின் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவிலேயே காணப்படுகிறது. அவ்வாறு பார்க்கையில் ஒவ்வொரு கார்த்திகையும் முருகனுக்கு மிகவும் சிறப்பு பெற்ற ஒரு நாளாக இருக்கிறது. இத்தகைய முறையில் முருகனை பற்றி நாம் எவ்வளவு தெரிந்து வைத்து இருந்தாலும் கூட முருகனுக்கு உரிய பாடல்கள் அவ்வளவாக தெரிவது இல்லை. ஆகையால் இன்று கற்பனை என்றாலும் சொல்லக்கூடிய முருகப்பெருமான் பாடல் வரிகளை தான் பார்க்கபோகிறோம்.
கற்பனை என்றாலும் பாடல் வரிகள்:

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் – நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |














