கர்ப்பரட்சாம்பிகை ஸ்லோகம்
ஒரு பெண்ணிற்கு திருமணம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாகும். திருமண ஆன மூன்று மாதத்திலே ஏதும் நல்ல செய்தி இருக்கிறதா என்று தான் கேட்பார்கள். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் சீக்கிரம் அமைந்து விடுகிறது. சில நபருக்கு தாமதம் ஆகும், சில நபருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மருத்துவர்களை தேடி அலைவார்கள். இன்னும் சில நபர்கள் கோவில் கோவிலாக செல்வார்கள். பெண்மை என்பது தாய்மையில் தான் முழுமை அடைகிறது. இல்லறம் என்பதும் குழந்தைப் பேறு கிடைத்த பின்தான் அதிக அளவில் இனிமையைக் கொண்டு சேர்க்கிறது. தாய்மை என்பதும் கருவுருவதும் ஒரு பெண்ணிற்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கும். அந்தக் குழந்தையை ஈன்றெடுக்கும் தருணம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் மறுபிறப்பு என்பதே உண்மை. அதனால் ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கர்ப்பரட்சாம்பிகை கடவுளுக்கு வழிபாடு செய்து ஸ்லோகத்தை கூற வேண்டும். இந்த ஸ்லோகத்தை கூறுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
Karparakshambigai Slogam in Tamil:
ஸ்ரீ மாதவீகானனஸ்தே ரக்ஷாம்பிகே
பாஹி மாம் பக்தம் ஸ்துவந்தம்
வாபீதடே வாமபாகே வாம
தேவஸ்யதேவ்ஸ்ய தேவீஸ்திதாத்வம்
மாந்யா வரேண்யாவதான்யா-பாஹி
கர்ப்பஸ்த்த ததா பக்த லோகான் ( ஸ்ரீ)
ஸ்ரீகர்ப்பரக்ஷாபுரயோ திவ்ய
சௌந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரி
தாத்ரீ ஜனத்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் ( ஸ்ரீ)
ஆஷாடமாஸே ஸுபுண்யே -சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம்பராகல்ப வேஷா வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ்ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)
கல்யாண தாத்ரீம் நம்ஸ்யே – வேதி
காட்யஸ்த்ரியாகர்ப்பரக்ஷாகரீம் த்வாம்
பா லைஸ்ஸதாஸேவிதாங்க்ரிம் – கர்ப்ப
ரக்ஷார்த்தமாராதுபேதைருபேதாம் ( ஸ்ரீ)
ப்ரம்ஹோத்ஸவே விப்ரவித்யாம் – வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் – தேவ
ப்ருந்தைரபீட்யாம் ஜகன்மாதரம்- த்வாம் (ஸ்ரீ)
ஏதத்க்ருதம் ஸ்தோத்ரரத்னம் – தீக்ஷி
தானந்தராமேண தேவ்யாஸ்ஸுதுஷ்ட்யை
நித்யம் படேத்யஸ்து பக்த்யா – புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம் ( ஸ்ரீ)
கர்ப்பரட்சாம்பிகை ஸ்லோகம் கூறுவதால் என்னென்ன நன்மைகள்:
பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏதும் பிரச்சனை இருந்தால் அவை தீர்ந்து விடும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கிடைக்கும்.
கர்ப்பமாக இருக்கும் போது குறை பிரசவம் ஏற்படாது.
திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |