கர்ப்பிணி பெண் கனவில் வருவது நல்லதா..? கெட்டதா..?

Advertisement

Karpini Kanavil Vanthal Enna Palan 

வாசகர்களுக்கு வணக்கம்..! சரி உங்களுக்கு ஆன்மீகத்தின் மீதி நம்பிக்கை இருக்கிறதா..? இது என்ன கேள்வி என்று திருப்பி கேட்பீர்கள். உண்மை தான் இன்றைய நிலையிலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் எனக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது என்று சொல்லி கொண்டு வாழ்கிறார்கள். சரி அவர்களின் பேச்சு நமக்கு ஏன். நாம் இப்போது நம் பதிவிற்கு வருவோம்.

பொதுவாக ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் எதை செய்தாலும் நல்ல நாள் பார்த்து தான் செய்வார்கள். உதாரணதிற்கு கெட்ட கனவு வந்தால் கூட அது நடந்து விடுமோ என்று அதிகம் பயன்படுவார்கள். அதனால் நாம் தினமும் இந்த பதிவின் மூலம் ஒவ்வொரு கனவிற்கான பலன்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று கர்ப்பிணி பெண் கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

கர்ப்பமான பெண்கள் எந்த மாதம் வரை கோவிலுக்கு செல்லலாம் தெரியுமா

கர்ப்பிணி பெண் கனவில் வந்தால் என்ன பலன்: 

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே கனவு என்பது வரும். அப்படி நாம் காணும் கனவுகள் நல்ல கனவாகவும் இருக்கும், கெட்ட கனவாகவும் இருக்கும். அதுபோல நாம் கண்ட கனவுகள் அனைத்தும் பலிக்குமா என்றால் அதற்கு பதில் கிடையாது.

ஒரு சில கனவுகள் பலிக்கும், சில கனவுகள் பலிக்காது. அப்படி நமக்கு வரும் கனவுகளில் இதுவும் ஓன்று. அதாவது கர்ப்பிணி பெண் கனவில் வந்தால் என்ன நடக்கும். இதற்கான பதிலை இங்கு காணலாம்.

பொதுவாக  கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாக போகிறது என்று அர்த்தம். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவாக திருமணம் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அதுபோல வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம்.  

இரண்டு கர்ப்பிணி பெண்கள் கனவில் வந்தால் கனவு காண்பவர்களுக்கு இரட்டை குழந்தை பிறக்கும் என்பது அர்த்தம் ஆகும்.

குழந்தை இல்லாமல் தவிக்கும்  பெண்களுக்கு கர்ப்பிணிகள் கனவில் வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலியால் துடிப்பது போல் கனவு வந்தால் வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாமா.. இருக்க கூடாதா.. 
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement