கற்பூர நாயகியே கனகவல்லி பாடல் வரிகள்..! | Karpura Nayagiye Kanakavalli Lyrics in Tamil

Advertisement

Karpura Nayagiye Kanakavalli Lyrics in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். பொதுவாக நம் மனதிற்கு அமைதியையும் நிம்மதியை தருவது பாடல் தான். அதனால் தான் சோகமாக இருந்தாலும் சரி சந்தோசமாக இருந்தாலும் பாடல் கேட்பது வழக்கமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பாடலை உச்சரித்து கொண்டே இருப்பதால் மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான சிந்தனை தோன்றும். முக்கியமாக, தெய்வ பாடல்களை நாம் கேட்கும்போது பாடும்போதும் நமக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்து நீங்கிவிடும். எனவே, அம்மனை போற்றி வணங்கக்கூடிய கற்பூர நாயகியே கனகவல்லி பாடல் வரிகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம்.

ஸ்ரீ லலிதா த்ரிசதீ பாடல் வரிகள் 

கற்பூர நாயகியே கனகவல்லி பாடல் வரிகள்:

கற்பூர நாயகியே… கனகவல்லி….
கற்பூர நாயகியே…. கனகவல்லி….
காளி மகமாயி! கருமாரி அம்மா…..
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
கற்பூர நாயகியே… கனகவல்லி….
காளி மகமாயி… கருமாரி அம்மா….

[நெற்றியில் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்!] (2)

கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
பாடும் கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
கற்பூர நாயகியே… கனகவல்லி….
காளி மகமாயி… கருமாரி அம்மா….

[காற்றாகி சணலாகிக் கடலாகினாய்!
கயிறாகி உயிராகி உடலாகினாய்!] (2)

நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகி பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்! (2)
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை! (2)
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை!
கற்பூர நாயகியே… கனகவல்லி….
காளி மகமாயி… கருமாரி அம்மா….
கருமாரி அம்மா!
கருமாரி அம்மா!

தன்வந்திரி ஸ்லோகம் வரிகள்

karpura nayagiye kanakavalli lyrics in tamil download

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement