கார்த்திகை தீபம் எப்போது 2024.? தேதி மற்றும் நேரம் இதோ.!

Advertisement

கார்த்திகை தீபம் 2024 தேதி மற்றும் நேரம் | Karthigai Deepam 2024 Date and Time in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கார்த்திகை தீபம் எப்போது.? (karthigai Deepam Date 2024 in Tamil) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கார்த்திகை தீபமும் ஒன்று. கார்த்திகை தீபம் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் தீபத்திருநாள் நாள். முன்னோர்கள் காலத்தில் இருந்து அறிவியல் ரீதியாகவும் மக்களின் நலனுக்காகவும் கொண்டாடப்படும் விழாவாக கார்த்திகை தீபம் இருக்கிறது. கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும். இந்நாளில் மக்கள் வீடுகளிலும் கோவில்களிலும் அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்கிறார்கள்.

கார்த்திகை தீபம் மூன்று நாளாக குமராலாய தீபம், சர்வாலய தீபம், விட்டுணுவாலய தீபம்  என்று கொண்டாடப்படுகிறது. இதில் குமராலாய தீபம் என்பது, முருகன் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நாண்மீன் கூடிவரும் நாள் என்பதால் முருகன் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. விட்டுணுவாலய தீபம் என்பது, விஷ்ணு கோவில்களில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகைத் திங்களில் உரோகிணி நாண்மீன் கூடிவரும் நாள். சர்வாலய தீபம் என்பது, அனைத்து இந்து கோவில்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும். எனவே, இந்த ஆண்டு 2024 கார்த்திகை தீபம் எப்போது வருகிறது.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளாலாம்.

கார்த்திகை தீபம் முறையாக ஏற்றுவது எப்படி..?

Karthigai Deepam Eppothu.? 

இந்த ஆண்டு 2024 கார்த்திகை தீபம் டிசம்பர் 13 ஆம் தேதி, (கார்த்திகை 28 ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.

கார்த்திகை நட்சத்திரம் தொடங்கும் நேரம் – டிசம்பர் 13 ஆம் தேதி, காலை 07:50AM மணி

கார்த்திகை நட்சத்திரம் முடியும் நேரம் – டிசம்பர் 14 ஆம் தேதி, காலை 05:45 AM மணி

கார்த்திகை தீபம் 2024 தேதி மற்றும் நேரம்

Tiruvannamalai Karthigai Deepam 2024 Date in Tamil:

கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலை பரணி தீபம் தான் நம் நினைவிற்கு வரும். சிவபெருமான் காட்சியளித்ததை நினைவுகூரும் வகையில், திருவண்ணாமலை மலை உச்சியின் மேல் தீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை கோவிலில் டிசம்பர் 13,2024 (கார்த்திகை 28) வெள்ளிக்கிழமை அன்று, காலையில் பரணி தீபமும், அன்று மாலை மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.

கார்த்திகை தீபம் கொண்டாடுவது ஏன் தெரியுமா?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement