Karthigai Deepam Ethanai Vilakku Etra Vendum
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். கார்த்திகை தினத்தன்று எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்.? என்பதை இப்பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் வாங்க. கார்த்திகை மாதத்தில் இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள் ஆன்மீக ரீதியாக கொண்டாப்படுகிறது. அதாவது கார்த்திகை சோமவாரம் மற்றும் திருக்கார்த்திகை தீபம் என இந்த இரண்டும் மிகவும் சிறப்பானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கார்த்திகை சோமவாரம் என்பது ஒவ்வொரு திங்கட்கிழமையும் வரும். ஆனால் திருக்கார்த்திகை தீபம் வருடா வருடம் மாறி மாறி தான் வரும்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான கார்த்திகை தீபம் டிசம்பர் 12-ஆம் தேதி அன்று வருகிறது. ஆகவே இத்தகைய திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றினால் நல்லது என்றும், எப்படி விளக்கு ஏற்ற வேண்டும் என்பதையும் தான் பார்க்கப்போகிறோம்.
கார்த்திகை தீபம் அன்று எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்.?
கார்த்திகை தீபம் ஏற்றும் முறை:
கார்த்திகை அன்று அகல் விளக்குகளில் தான் அதுவும் நல்லெண்ணெயில் தான் விளக்கு ஏற்ற வேண்டும். அதேபோல் அகல் விளக்கிற்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தினால் பொட்டு வைக்க வேண்டும்.
அதேபோல அகல் விளக்கிற்கு அடியில் வெற்றிலை அல்லது வாழை இலை என இரண்டில் ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். மேலும் வீட்டு வாசலில் இருந்து விளக்கு ஏற்ற வேண்டும்.
- வீட்டு முற்றத்தில் 4 விளக்கு,
- சமையல் கூடத்தில் 1 விளக்கு,
- நடையில் 2 விளக்கு,
- வீட்டின் பின்புறம் 4 விளக்கு,
- திண்ணையில் 4 விளக்கு,
- மாட குழியில் 2 விளக்கு,
- நிலைப்படிக்கு 2 விளக்கு,
- சாமி படத்துக்கு கீழே 2 விளக்கு,
- வெளியே யம தீபம் ஒன்று,
- திருக்கோலம் இட்ட இடத்தில் 5 விளக்கு
மொத்தம் 27 விளக்குகள் ஏற்றவேண்டும்.
இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்
இத்தகைய இடங்களில் கட்டாயமாக விளக்கு ஏற்ற வேண்டும். இவை இல்லாமல் வேறு இடத்தில் உங்களது விருப்படி எத்தனை விளக்கு வேண்டுமானாலும் ஏற்றிக்கொள்ளலாம்.
மேலும் குறைந்தபட்சம் 9 விளக்கு முதல் அதிகப்பட்சகமாக 27 விளக்கு திருக்கார்த்திகை அன்று ஏற்ற வேண்டும். அதேபோல் கார்த்திகை தீபம் அன்று காலையில் குளித்து விட்டு முருகப்பெருமானை நினைத்து வழிபட வேண்டும்.
பின்பு மாலை எல்லாம் அல்ல சிவபெருமானை நினைத்து திருவிளக்கு ஏற்றி வாழ்க்கையில் உள்ள இருள்கள் அனைத்தும் நீங்கி பிரகாசம் உண்டாக வேண்டும் என்று மனதார பூஜை செய்யுங்கள்.
எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்?
- விளக்கை கிழக்கு திசை நோக்கி ஏற்றினால் துன்பங்களை நீக்கும்.
- தீபங்களை வடக்கு திடை நோக்கி ஏற்றினால் அறிவு வளரும், செல்வம் அதிகரிக்கும்.
- மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். மேலும், தோஷங்களும் நீங்கும்.
- விளக்கை எந்த காரணத்தைக் கொண்டும் தெற்கு திசையில் ஏற்றவே கூடாது.
- வாசலில் ஏற்றப்பட்ட தீபம் ஆனது, குறைந்தபட்சம் அரைமணி நேரம் ஆவது, எரிய வேண்டும்.
- விளக்குகளை முதலில் பூஜை அறையில் ஏற்றிவிட்டு அதன் பிறகு தான் வாசலில் ஏற்ற வேண்டும். தீபத்தை வயல் ஊதி அணைக்கக்கூடாது.
- விளக்கை அணையுங்கள் என்று சொல்லக்கூடாது. விளக்கை குளிர வையுங்கள் என்று சொல்லணும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |