கார்த்திகை தினத்தன்று சொல்லவேண்டிய மந்திரம்.! | Karthigai Deepam Mantra in Tamil

Advertisement

Karthigai Mantra in Tamil | கார்த்திகை மந்திரம்

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கார்த்திகை தினத்தன்று சொல்லவேண்டிய மந்திரங்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். திருக்கார்த்திகை நாளில் வீட்டில் தீபம் ஏற்றிய பிறகு, தேவாரம், நவசிவாய திருப்பதிகம், சிவ புராணம், திருவண்ணாமலை பதிகம் போன்றவற்றை உச்சரிக்கலாம். செய்த பாவத்திற்கெல்லாம் தீர்வு கிடைக்க ஒரு வலி கிடைக்காதா என்று தேடிக்கொண்டிருக்கிறோம். நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களுக்கு முக்தி கிடைக்க எம்பெருமானால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பான நாள் தான் கார்த்திகை திருநாள்.

எனவே, அந்த கார்த்திகை தீப திருநாளில் இறைவனின் அருளை பெறவும், வாழ்வில் சகல செல்வங்களை பெறவும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை, கார்த்திகை தீப திருநாளில் வீடு முழுவதும் தீபம் ஏற்றிய பிறகு, உச்சரியுங்கள்.

கார்த்திகை தீபம் ஏற்றும்போது சொல்ல வேண்டிய மந்திரம்:

Karthigai Mantra in Tamil

தீபம் ஜோதி பரப்பிரம்மம்

தீபம் சர்வ தமோபஹம்

தீபனே சாத்யத சர்வம்

சந்த்யா தீப நமோஸ்துதே!

இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். 108 முறை உச்சரிக்க முடியாதவர்கள் 9 முறை அல்லது 11 முறை உச்சரிக்காலம். இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால், குடும்ப ஒற்றுமை உண்டாகும். வாழ்வில் சகல செல்வங்களும் கிடைக்கும். துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.

இதோடு மட்டுமில்லாமல், சிவபெருமானை நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றும் போது பின்வருமாறு மந்திரத்தை கூறுங்கள்.

கார்த்திகை நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?

நமசிவாய பதிகம்:

இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.

பொருள்: இல்லத்தினுள் ஏற்றும் விளக்கானது இருளைக் ஒழித்து, ஒளி கொடுப்பது. சொல்லினுள் உள்ள நல்ல கருத்தான விளக்கானது ஜோதி வடிவில் வழி கொடுப்பது. பல்லோரும் காணக்கூடிய வானக விளக்கானது காட்சியைக் கொடுப்பது. இந்த மூன்று விளக்குகளையும் விட சிறப்பான ‘நமசிவாய’ எனும் மந்திர விளக்கே ஈசனை அடைய உதவுவது. எனவே நமசிவாய என்று நாளும் பொழுதும் ஓத வேண்டும்

கார்த்திகை தினத்தன்று முருகனை ஜோதி வடிவில் வழிபாடு செய்ய பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள திருப்புகழ் பாடலை உச்சரியுங்கள்.

முருகனை ஜோதி வடிவில் வழிபாடு செய்ய திருப்புகழ் பாடல்:

பரமகுரு நாத கருணையுப தேச
பதவிதரு ஞானப் – பெருமாள்காண்

பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
பகருமதி காரப் – பெருமாள்காண்

திருவளரு நீதி தினமனொக ராதி
செகபதியை யாளப் – பெருமாள்காண்

செகதலமும் வானு மருவையவை பூத
தெரிசனைசி வாயப் – பெருமாள்காண்

ஒருபொருள தாகி அருவிடையை யூரு
முமைதன்மண வாளப் – பெருமாள்காண்

உகமுடிவு கால மிறுதிகளி லாத
உறுதியநு பூதிப் – பெருமாள்காண்

கருவுதனி லூறு மருவினைகள் மாய
கலவிபுகு தாமெய்ப் – பெருமாள்காண்

கனகசபை மேவி அனவரத மாடு
கடவுள்செக சோதிப் – பெருமாளே.

தீப லட்சுமி துதி:

தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:

தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே

பொருள்: ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன்.

மேற்கூறிய மந்திரங்களையும் பாடல்களையும் கார்த்திகை தீபத்திருநாளில் உச்சரித்து வழிப்பட்டால் வாழ்வில் நன்மையே உண்டாகும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement