karthigai Deepam Pooja Procedure in Tamil..!
ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதங்களில் ஒன்றான கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை கொண்டாடுபடுகிறது. அந்த வகையில் இத்தகைய திருக்கார்த்திகை அன்று அண்ணாமலையார் மற்றும் முருகப்பெருமான் என இவர்கள் இருவரையும் வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்று. இதன் பாடி பார்க்கையில் மற்றொரு சிறப்பாக அனைவரது வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் கார்த்திகை திருநாள் ஆனது பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் சேர்ந்த நாளில் தான் வருகிறது. இதன் படி பார்கையில் 2023-ஆம் ஆண்டிற்கான கார்த்திகை 26.11.2023-ஆம் ஆண்டு ஞாயிற்று கிழமை தமிழ் மாதத்தின் படி பார்க்கையில் கார்த்திகை 10-ஆம் தேதியும் வருகிறது.
கார்த்திகை தீபம் ஏற்ற சரியான நேரம் தெரியுமா
கார்த்திகை தீப வழிபாடு:
திருக்கார்த்திகை அன்று முருகப்பெருமான் அல்லது சிவன் கோவிலுக்கு காலையிலேயே குளித்து விட்டு செல்ல வேண்டும். மேலும் கோவிலில் நல்ல எண்ணெயில் ஒரு அகல் விளக்கு ஏற்றி மனதில் நினைக்கும் காரியங்கள் நிறைவேற வேண்டும் என்று மனதார பிராத்தனை செய்ய வேண்டும்.
இத்தகைய வழிபாட்டிற்கு பின்பாக மாலை நேரத்தில் உங்களது வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு ஏற்றி ஏதேனும் இனிப்பு செய்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
விளக்கு ஏற்ற உகந்த எண்ணெய்:
கார்த்திகை என்று நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றுவது உகந்ததாக இருந்தாலும் கூட 5 வகையான எண்ணெய்கள் கலந்து தீபம் ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகவே இருக்கும்.
ஆகையால் தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணைய் மற்றும் நெய் என இவை அனைத்தையும் நீங்கள் விளக்கு ஏற்ற தகுந்தவாறு கலந்து கொண்டு பின்பு அந்த எண்ணெயினை வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
அதேபோல் உங்களது வீட்டில் எத்தனை மண் அகல் விளக்குகள் ஏற்றினாலும் கூட கட்டாயமாக குத்து விளக்கு ஏற்ற வேண்டும். அதுவும் உங்களது நிலை வாசல் அல்லது தெரு வாசலில் ஏற்றுவது நல்லது.
கார்த்திகை என்று செய்யக்கூடாதவை:
திருகார்த்திகை அன்று வீட்டில் உள்ளவர்கள் யாரும் எண்ணெய் தேய்த்து குளித்தல் மற்றும் அசைவ உணவு சாப்பிடுதல் என இதுபோன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
அதேபோல் வீட்டில் ஏற்றி வைத்து இருக்கும் விளக்கினை வாயினால் ஊதி அணைக்கவோ அல்லது கையினை கொண்டு அணைக்கவோ கூடாது. ஆகவே 1 விரலி மஞ்சளை எடுத்துக்கொண்டு அதனை வைத்து தான் விளக்கை அணைக்க வேண்டும்.
கடன் தீர திருக்கார்த்திகை அன்று கல் உப்பில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |