கார்த்திகை தீபம் வழிபடும் முறைகள் மற்றும் விளக்கேற்றும் திசைகள்.!

Advertisement

Karthigai Deepam Valipadu in Tamil

கார்த்திகை மாதம் முழுவதும் தீபத்திற்குரிய மாதமாக கருதப்படுகிறது. இந்த கார்த்திகை மாதத்தில் பெரிய கார்த்திகை தீபத்திருநாள் என்று ஒருநாள் கொண்டாப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், கார்த்திகை தீபம் அன்று விரதம் இருந்து கடவுளை வழிபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். இந்நாளில், வீடு முழுவதும் அகல் விளக்கு, குத்துவிளக்கு ஏற்றி கடவுளுக்கு பலவிதமான பிரசாதங்களை படைத்து வழிபடுவார்கள். கார்த்திகை திருநாளில் விளக்கேற்றும் முறை என்று ஒன்று உள்ளது. அதனை நாம் முறையாக செய்வதன் மூலம் கடவுளின் முழு ஆசியையும் பெறலாம். எனவே, கார்த்திகை தீபம் அன்று எப்படி வழிபாடு செய்ய வேண்டும்.? எந்த திசையில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கார்த்திகை தீபம் வழிபாடும் முறை:

பொதுவாக கடவுளை வழிபடுவதற்கு முக்கிய பொருளாக இருப்பது தீபம். எனவே, பூஜை அறையை அகல் விளக்கு ஏற்றி அலங்கரித்து பால்,சர்க்கரை மற்றும் கற்கண்டு போன்றவைகளை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

மேலும், முக்கியமாக பொறியில் வெல்ல பாகு சேர்த்து கார்த்திகை பொறி படைத்து வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்களை பெறலாம்.

 கார்த்திகை தீப வழிபாடு

கார்த்திகை தீபம் எரிந்து அணையும் நேரத்தில் வெறும் கையால் கொண்டு விளக்கை அணைக்க கூடாது. பூ, பால் துளி அல்லது நீர்த்துளி கொண்டு விளக்கை அணைக்க வேண்டும். மேலும், விளக்கை அணைக்கும்போது, மனதில் ‘சாந்த ஸ்வருபியே நமஹ’ என்று சொல்லிக்கொண்டே அணைக்க வேண்டும்.

கார்த்திகை தீபம் ஏற்ற சரியான நேரம் தெரியுமா

விளக்கேற்றும் திசை:

கார்த்திகை வழிபாடு

கார்த்திகை அன்று தீபத்தை வடக்கு திசை நோக்கியும், மேற்கு திசை நோக்கியும், கிழக்கு திசை நோக்கியும் ஏற்றி வழிபடலாம். ஆனால், தெற்கு திசை மட்டும் பார்த்து விளக்கு ஏற்ற கூடாது. 

வடக்கு திசை பலன்கள் – வடக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் செல்வ வளர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் உண்டாகும்.

மேற்கு திசை பலன்கள் – மேற்கு திசை பார்த்து விளக்கு ஏற்றுவதன் மூலம் குடும்பத்தில் உள்ள கடன் தொல்லையும் தோஷங்களும் நீங்கும்.

கிழக்கு திசை பலன்கள் – கிழக்கு திசையில் விளக்கு ஏற்றுவதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.

திருக்கார்த்திகை அன்று எத்தனை விளக்கு எந்த முறையில் ஏற்ற வேண்டும் தெரியுமா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement