1 முதல் 12 முக தீபம் ஏற்றதினால் உண்டாகும் நன்மைகள்..!

Advertisement

தீபம் ஏற்றுவதன் பலன் – karthigai deepam 

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது நம் வாழ்வைப் பிரகாசிக்க செய்யும். வேத ஜோதிடத்தில் கூட விளக்கேற்றுவது தீபம் ஏற்றுவதே அனைத்து விதமான துன்பத்தில் இருந்தும் விடுபட மேன்மையான பலனாக அமையும் என கருதப்படுகின்றது. துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். இந்த கார்த்திகை திருநாளில் விளக்கேற்று வழிபட்டால் அனைத்து நலன்களும் கிட்டும். தீபத் திருநாள் அன்று விளக்கேற்ற உதவும். பொதுவாகவே இல்லங்களில் இரு வேளைகள் விளக்கேற்றுவது அனைத்து மங்களங்களையும் தந்து நமது வாழ்வை ஒளிமயமாக்கும். தீபம் ஏற்றி வழிபடும்போது சிவபெருமான் மட்டுமல்லாமல் மூன்று தேவியரின் அருளும் கிடைக்கும். அகல், எண்ணெய், திரி, சுடரொளி இவை நான்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற தத்துவத்தை உணர்த்துகின்றது. திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் போது அதைக் கண்டாலே வாழ்வில் மோட்சம் கிடைக்கும். சரி இப்பதிவில் கார்த்திகை தீபம் அன்று ஓன்று முதல் பன்னிரண்டு முக தீபங்களை ஏற்றுவதனால் உண்டாகும் நன்மைகளை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கார்த்திகை தீப திருவிழா அன்று இதை மட்டும் செய்யுங்க கூடிய விரைவில் சொந்த வீடு அமையும்..!

கார்த்திகை தீபம் 1 முதல் 12 முக தீபம் ஏற்றுவதினால் ஏற்படும் நன்மைகள்கார்த்திகை தீபம்

  1. ஒரு முக விளக்கு குடும்ப ஒற்றுமையை ஒங்க செய்யும்.
  2. இரண்டு முக விளக்கு உங்கள் தாய் தந்தியின் உடல் நலத்தை மேன்மையாக்கும்.
  3. மூன்று முக விளக்கு சிவன், விஷ்ணு, பிரம்ம மும்மூர்த்திகளின் அனுகூலம் கிடைக்கும்.
  4. நான்கு முக விளக்கு வெளிநாடு சுபயோக வாழ்விற்காக ஏற்றலாம்.
  5. ஐந்து முக விளக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  6. ஆறுமுக விளக்கு ஓம் ஸ்ரீ முருகபெருமானின் அனுகூலம் கிடைக்கும்.
  7. ஏழுமுக விளக்கு நீடித்த பெயர் மற்றும் புகழுக்காக.
  8. எட்டு முக விளக்கு பொன், பொருள், செல்வம் சேமிக்க ஓம் ஸ்ரீ மகாலட்சுமியின் காட்டாட்சியம் பெருகும்.
  9. ஒன்பது முக விளக்கு ஓம் மகா ஒன்பது நவகிரகங்களின் அனுகூலம் கிடைக்கும்.
  10. பத்து முக விளக்கு ஓம் ஸ்ரீ மகா விஷ்ணுவின் அருள் பெருகும்.
  11. பதினோரு முக விளக்கு ஓம் ஸ்ரீ பரம்பொருளின் அனுக்கிரகம் கிடைக்கும்.
  12. பன்னிரண்டு முக விளக்கு ஜோதிட சாஸ்த்திரி 12 பாவங்களையும்/ ஸ்தானங்களையும் பலப்படுத்தி ஐஸ்வர்யமிக்க செழிப்பான சுப யோகமாக வாழ்விற்காக.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கார்த்திகை தீபம் ஏற்ற சரியான நேரம் தெரியுமா.?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement