Karthigai Natchathiram
வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! இன்றைய பதிவில் நட்சத்திரத்திற்கு ஏற்ற மாதிரியான ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதாவது ஆன்மீகத்தில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் இருப்பது நமக்கு தெரிந்த ஒன்று. அதேபோல் நட்சத்திரக்காரர்கள் அனைவரும் வெவ்வேறு குணத்தினை உடையவராக இருப்பார்கள். ஆனால் அவர்களின் குணம் பற்றிய முழு விவரம் தெரியாது. ஏன் நம்முடைய நட்சத்திரத்திற்கும், நமக்கும் உள்ள குணங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்று சிந்தித்து இருப்போம். இதற்கு அடுத்த நிலையாக அதை தெரிந்துருக்க மாட்டோம். அதனால் இன்று கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் முதல் வாழ்க்கை வரை என அனைத்தும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் வாங்க..!
கார்த்திகை நட்சத்திரம் குணங்கள்:
கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் ஒரு பாதம் மேஷ ராசியிலும், மற்ற 3 பாதம் ரிஷிப ராசியிலும் இருக்கிறது.
- கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் எப்போதும் நேர்மையான குணத்தினை உடையவராகவும், அதிக ஆற்றல் மற்றும் புத்திசாலி தனம் உடையவராகவும் காணப்படுவார்கள்.
- அதேபோல் இந்த நட்சத்திரக்காரர்கள் எப்போதும் வீட்டிற்கு வருபவரை கவனித்து அனுப்பும் தன்மை உடையவர்கள். மேலும் அதிக இரக்க குணம் மற்றும் உதவி மனப்பான்மை அதிகமாக இருக்கும்.
- ஆனால் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களுடன் எப்போதும் நெருங்கி பழமாட்டார்கள்.
- இத்தகைய நட்சத்திரக்காரர்களுக்கு பிடிவாதம் மற்றும் கஞ்சத்தனம் என்பது சிறிதளவு எப்போதும் இருக்கக்கூடிய ஒன்றாக காணப்படும்.
- இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போது தனக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கையினை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். அதேபோல் விட்டு கொடுக்கும் மனப்பான்மை என்பதுஅவ்வளவாக இருக்காது.
- மேலும் தன்னம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை என இந்த இரண்டும் இவர்களிடத்தில் அதிகமாக இருக்கும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தெரியுமா |
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்:
கல்வி:
இந்த நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கையில் கல்வி என்பது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஏனென்றால் கல்வியினை இவர்கள் சிறப்பான முறையில் கற்று விடுவார்கள்.
தொழில்:
தொழிலை பொறுத்தவரை இவர்கள் அதிகமாக கூட்டு தொழில் செய்வது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்ற வணிக தொழில்களில் அதிக ஆர்வம் உடையவராக இருந்து வருமானம் பெறுவார்கள்.
கார்த்திகை நட்சத்திரம் திருமண வாழ்க்கை:
இத்தகைய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணத்தை விரும்பாத நபராக இருப்பதனால் குடும்பத்தில் பார்க்கும் நபரை தான் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் குடும்பத்தில் பெரிதும் விட்டுக் கொடுத்து வாழாமல் பிடித்ததை செய்யும் குணம் உடையவராக இருப்பார்கள்.
அதிர்ஷ்டமான கல், நிறம் மற்றும் எண்கள்:
ராசியான கல்:
- ரூபி
அதிர்ஷ்டமான நிறம்:
- சிவப்பு
அதிர்ஷ்டமான எண்:
- மாணிக்க கல்
வழிபட வேண்டிய தெய்வம்:
- சிவன்
மந்திரம்:
- ஓம் அக்னயே நம
அதிபதி:
- கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் ஆகும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படி தான் இருக்குமா |
கார்த்திகை நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரம்:
பெண் நட்சத்திரம்:
- கார்த்திகை 1,2,3 மற்றும் 4– ஆம் பாதம் – சதயம்
இவை பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரம் ஆகும்.
ஆண் நட்சத்திரம்:
கார்த்திகை 1 -ஆம் பாதம்: சித்திரை 3 மற்றும் 4-ஆம் பாதம், அவிட்டம் 1 மற்றும் 2-ஆம் பாதம்.
கார்த்திகை 2,3 மற்றும் 4-ஆம் பாதம் – அஸ்தம், கேட்டை, அவிட்டம் 3 மற்றும் 4– ம் பாதம், சித்திரை 1 மற்றும் 2-ம் பாதம்.
இவை ஆண் நட்சத்திரத்திற்கு பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரம் ஆகும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |