கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

Advertisement

Karungali Malai Benefits in Tamil | கருங்காலி மாலை யார் அணியலாம்/அணியக் கூடாது?

பொதுவாக பெண்களாக இருந்தால் மணி அல்லது செயினகளை அணிந்து கொள்வார்கள். அதுவே ஆண்கள் செயின் அல்லது கடையில் விற்கும் மணிகளை அணிகின்றனர். ருத்ராட்ச மாலை கேள்விப்பட்டிருப்போம் அது என்ன கருங்காலி மாலை என்று அனைவரிடமும் சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது நடிகர்கள் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால் இளைஞர்களும் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

ஆனால் இதனை பயன்படுத்துவதால் என்ன நன்மைகள் என்று தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு உதவும் விதத்தில் இந்த பதிவில் கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

கருங்காலி என்றால் என்ன.?

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

கருங்காலி என்பது வறட்சியை தாங்கி வளரும் ஒரு தாவரமாகும். உலகில் வெப்பம் மிகுந்த நாடான ஆப்ரிக்கா காடுகளில் தான் இருக்கிறது. இந்த மரமானது இயற்கையாகவே கார்பன் எனப்படும் கரித்தன்மையை தனக்குள் வாங்கி சேமித்து வைத்து கொள்கிறது.

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்:

நம்மை சுற்றியுள்ள நெகட்டிவ் எனர்ஜி வெளியேறும். தெளிவான எண்ணங்களுடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு வருகின்ற பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் மறையலாம்.

மனிதர்கள் தன்னிடம் இல்லாத பொருளையோ, குணத்தையோ, உடல் ஆரோக்கியத்தை பார்த்தோ பொறாமை என்றும் கூறலாம். அல்லது கண் திருஷ்டி என்றும் கூறலாம்.  கண் திருஷ்டி வந்து விட்டால் அந்த நபரை பாதிக்க செய்யும். அதனால் கண் திருஷ்டியிலிருந்து விடுபடுவதற்கு சரி, கண் திருஷ்டி வராமல் இருப்பதற்கு சரி கருங்காலி மாலை அணிய வேண்டும்.

நகை அணிவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா..?

மேலும் கருங்காலி மாலை அணிவதால் தெய்வீக சக்தி அதிகமாக இருக்கும். இதனால் பண பிரச்சனை இல்லாமல் வாழ்க்கையில் செல்வ செழிப்போடு இருப்பீர்கள்.

மேலும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. செரிமான பிரச்சனை இருந்தால் அவை நீங்கும், உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. பெண்களுக்கு உள்ள மாதவிடாய் பிரச்சனை இருந்தால் அவை நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

மன உறுதியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. உங்களுக்கு கோபம் அதிகமாக வரும் என்றால் இந்த மாலை அணிவதால் கோபம் குறையும்.

யாரெல்லாம் கருங்காலி மாலை அணியலாம்:

கருங்காலி மலையானது மேஷம், விருச்சிகம் ராசி, அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், செவ்வாய்கிழமையில் பிறந்தவர்கள், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்கள் அணிவதற்கு சிறந்ததாக ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

கருங்காலி மாலை எப்படி அணிவது:

இந்த மாலையை நீங்கள் வெளியில் தெரியும்படியும் அணியலாம், இல்லையென்றால் சிறியதாகவும் அணியலாம். மாலையை அப்படியே வேண்டுமானாலும் அணியலாம், அல்லது சில்வர் அணிந்தும் போடலாம். அல்லது பிரேஸ்லெட்டாக கையில் கூட அணிந்து கொள்ளலாம்.

ஸ்படிக மாலை அணிவதால் ஏற்படும் பயன்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement