How To Find Original Karungali Malai
கருங்காலி மாலை என்பது பழமையான வைரம் பாய்ந்த மரத்தின் நடுப்பகுதியை வெட்டி அதிலிருந்து தயாரிக்கப்படும் ஒன்றாகும். அதாவது, இது ஒரு பழமையான மர வகையை சார்ந்தது. பழங்காலத்தில் கருங்காலி மரத்தில் இருந்து உலக்கை, வீட்டு மரச்சாமான்கள், பூஜை பொருட்கள் மற்றும் முக்கியமாக மரப்பாச்சி பொம்மைகள் ஆகியவற்றை செய்து வந்தனர். ஆனால், தற்போது இதன் விலை அதிகரித்துள்ளதால், கருங்காலியை கொண்டு செய்யப்படும் பொருட்களின் விளையும் அதிகமாக உள்ளது. குறிப்பாக கருங்காலி மரத்தில் செய்யப்படும் கருங்காலி மாலை தற்போது அதிக வரவேற்பை பெற்று வருகிறது. ஓகே வாருங்கள் நீங்கள் வாங்கிய கருங்காலி மாலை உண்மையான கருங்காலி மாலை தானா என்பதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
கருங்காலி மாலை என்றால் என்ன.?
நீண்ட காலம் பழமையான கருங்காலி மரத்தின் நடுப்பகுதியை வெட்டி அதிலுள்ள கருப்பு நிற மர துண்டுகளை வைத்து 108 மணிகளாக தொடுக்கப்படுவதே கருங்காலி மாலை ஆகும்.
கருங்காலி மாலையை நாம் கழுத்தில் அணிவதன் மூலம் நம் உடலில் உடலில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுக்குள் இருக்கிறது. அதாவது, நம் உடலில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
இந்த மாலையை அணிவதற்கு முறைகள் இருக்கிறது. அதன்படி அணிவது நல்லது. கருங்காலி மாலையை ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம்.
கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
கருங்காலி மாலை ஒரிஜினல் எப்படி கண்டுபிடிப்பது.?
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நீங்கள் வாங்கி வந்த கருங்காலி மாலையை அதில் போட்டு விடுங்கள்.
அதனை அப்படியே வைத்து விடுங்கள். அதாவது, 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் வரை தண்ணீரிலேயே போட்டு வைத்து விடுங்கள்.
போலியான கருங்காலி மாலை – 1 மணிநேரத்திற்கு பார்க்கும்போது, அந்த தண்ணீர் கருப்பு நிறத்தில் மாறினாலோ அல்லது மாறாமல் இருந்தாலோ அது போலியான கருங்காலி மாலை ஆகும்.
உண்மையான கருங்காலி மாலை – உண்மையான கருங்காலி மாலை ஆனது தண்ணீரில் போட்ட சில நேரங்களில் அந்த தண்ணீர் பழுப்பு நிறமாக மாறி கருங்காலி மரத்தின் சாறுகள் தண்ணீரில் இறங்கி எண்ணெய் போல் தண்ணீரின் மேலே மிதக்கும். எனவே, இதுவே உண்மையான கருங்காலி மாலை ஆகும்.
எந்த ராசிக்காரர்கள் கருங்காலி அணியலாம் என்று தெரியுமா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |