வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கருங்காலி மாலை தீமைகள்..!

Updated On: April 26, 2024 5:46 PM
Follow Us:
Karungali Malai Theemaigal in Tamil
---Advertisement---
Advertisement

கருங்காலி மாலை தீமைகள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கருங்காலி மாலை தீமைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. கருங்காலி மாலை பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். கருங்காலி மாலை அணிவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம் என மற்றவர்கள் கூறி கேட்டு இருப்போம். ஆனால், கருங்காலி மாலையில் அதிக அளவில் நன்மைகள் இருந்தாலும் ஒரு சில தீமைகளும் இருக்கத் தான் செய்கிறது. அதனை பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

கருங்காலி மரத்தின் கட்டை, பட்டை, வேர், பிசின் உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ சக்தி வாய்ந்தது. கருங்காலி மரத்தின் நடுப்பகுதியை வெட்டி, அதிலிருந்து தான் கருங்காலி மாலை செய்யப்படுகிறது. ஆன்மீக ரீதியாக பார்த்தால் கருங்காலி மாலை மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை அணிந்து கொண்டால், நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் அறிந்து இருப்போம். ஆனால், நமக்கு தெரியாத ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

Karungali Malai Theemaigal in Tamil:

கருங்காலி மாலை தீமைகள்

கருங்காலி மாலையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால் பணவரவு என்பதே இருக்காது. அதாவது, இது பணத்தை குறைக்கக்கூடியது ஆகும். ஆகையால், கருங்காலி மாலையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைக்கக்கூடாது.

கருங்காலி மாலை அணிவதால் செவ்வாய் கிரகத்தின் தோஷங்கள் குறையும். ஆனால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இது ஏற்றது என்று கூற முடியாது.

கருங்காலி மாலையை வீட்டில் வைத்து வழிபடுவதால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே பொருந்தும்.

இப்போது பெரும்பாலும் போலியான கருங்காலி மாலைகள் விற்பனை செய்யப்படுவதால், அதனை நாம் அணிவதால் நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகையால், ஒரிஜினல் கருங்காலி மாலையை கண்டறிந்து வாங்குவது நல்லது.

இதனை கருங்காலி மாலையின் தீமை என்று கூறலாம். மற்றபடி கருங்காலி மாலை அணிவதால் ஆரோக்கியம் மேம்படும், நேர்மறை ஆற்றலை ஈர்த்து வைத்துக் கொள்ளக்கூடிய அற்புத பொருள் என்றும் கூறலாம்.

கருங்காலி மாலை யார் யார் அணியலாம்?

கருங்காலி மாலையை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் அணியலாம்.

நீங்கள் வாங்கும் கருங்காலி மாலை ஒரிஜினல் மாலை தானா என்பதை இப்படி தான் கண்டுபிடிக்க வேண்டும்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now