கருங்காலி மாலை Vs செங்காலி மாலை
இன்றைய காலகட்டத்தில் கருங்காலி மாலை மற்றும் செங்காலி மாலை அணியும் பழக்கம் அதிகம் உள்ளது. பெண்கள் பயன்படுத்தும் கழுத்து அணிகலன்கள் போல் இப்போது ஆண்களும் இந்த வகையான மாலைகளை பயன்படுத்துகின்றனர். இப்படி திடீர் என்று எழுச்சி பெற்றுள்ள இந்த மாலையில் அப்படி என்னதான் இருக்கின்றது. உண்மையில் இந்த மாலைகள் ஆன்மிக பயன்கொண்டது தானா அல்லது இன்றைய புதிய பேஷனாக கருங்காலி மாலை மற்றும் செங்காலி மாலை உள்ளதா என்று தெரியவில்லை. அதன் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். இன்றைய பதிவில் கருங்காலி மாலை மற்றும் செங்காலி மாலை என இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளையும் அந்த மாலை அணிவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள்.
கருங்காலி மாலை மற்றும் செங்காலி மாலை:
கருங்காலி மாலை மற்றும் செங்காலி மாலை ஆகிய இரண்டு மாலைகளும் ஒரே தன்மையுடைய மரங்களில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
பொதுவாக இந்த கருங்காலி மாலையை இவர்கள் அணியலாம், இவர்கள் அணியக்கூடாது, இந்த ராசிக்காரர்கள் அணியலாம் இந்த ராசிக்காரர்கள் அணிய கூடாது என்று எந்த ஒரு விதி முறைகளும் இல்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆண் பெண் இருவருமே எல்லா நேரங்களிலும் அணிந்துகொள்ளலாம்.
ஆனால், ஆன்மிக முறைப்படி பார்த்தல் கருங்காலி மாலை மிருக சீரிட நட்சத்திரத்திற்கு உரியது.
செங்காலி திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரியது.
கருங்காலி மாலை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை..!
கருங்காலி மாலை மற்றும் செங்காலி மாலை அணிவதால் கிடைக்கும் பலன்கள்:
கருங்காலி மாலை அணிந்து இருப்பவர்களை கண் திருஷ்டியில் இருந்து கருங்காலி மாலை பாதுகாக்கும். அதுமட்டும் அல்லாமல் செல்வ நிலை உயரும், அதிஷ்டம் அதிகரிக்கும் என்று நம்ப படுகிறது.
கருங்காலி மாலை அணிபவருக்கு கிடைக்கும் அனைத்து பலன்களும் செங்காலி மாலை அணிபவருக்கு கிடைக்கும்.
ஆதி காலத்தில் மரங்கள் தான் இறைவனாக பார்க்கப்பட்டது. அந்தவகையில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 வகையான மரங்களை நாம் முன்னோர் வழிபட்டனர். அந்த 27 மரங்களில் இந்த கருங்காலி மற்றும் செங்காலி இரண்டும் அடங்கும்.
கருங்காலி மரங்கள் மிகவும் உறுதியானவை. செங்காலி கருங்காலியை விடக் கொஞ்சம் உறுதித் தன்மை குறைந்தது.
கருங்காலி மற்றும் செங்காலி ஆகிய இரண்டு மரங்களும் மருத்துவ குணம் கொண்டது. இவை வயிற்றில் உள்ள தேவையற்ற நச்சுக்களை போக்கும் சக்தி கொண்டது.
இந்த மரங்கள் வசிய தன்மை கொண்டதாகவும் கருதப்படுகிறது.
விநாயகரின் கீர்த்தியை கூறும் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாடல் வரிகள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |