Karya Siddhi Malai Lyrics in Tamil
பொதுவாக ஆன்மிகத்தில் நாட்டம் இருப்பவர்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் ஆன்மிக பாடல்களை கேட்பார்கள். ஆன்மிக பாடல்கள் கேட்பதன் மூலம் அவர்களின் மனது அமைதியாகின்றது, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கின்றது என்று நினைக்கிறார்கள். சில நபர்கள் பூஜை செய்யும் அந்தந்த கடவுளுக்கு உரிய பாடல்களை பாடி கொண்டே பூஜை செய்வார்கள். கடவுளுக்கு உகந்த நெய் வெத்தியம் மற்றும் பாடல்களை பாடுவதன் மூலம் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கிறது என்று எண்ணுகிறார்கள். இருந்தாலும் சில நபர்களுக்கு ஆன்மிக பாடல்கள் தெரிவதில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் காரிய சித்தி மாலை பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம்.
காரிய சித்தி மாலை பாடல் வரிகள்:

1.பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.
பொருள்: இந்த உலகில் காணப்படும் எல்லா விதமான பாசங்களையும் நீக்கி, நற்பண்புகளுக்கு மூலமாக விளங்கும், பிரபஞ்சத்தை சிருஷ்டித்து, பாதுகாத்து, அழித்து, தன் லீலைகளை நிகழ்த்தும், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் மேலும் அறுபத்திநான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும்முழுமையான முதற்கடவுளாகிய விநாயகப் பெருமானை, நான் முழுமனதோடு அன்போடு வணங்குகிறேன்.
2. உலகம் முழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலகு முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: இடம் காலம் என்னும் எல்லாப் பரிமாணங்களையும் கடந்தும், எல்லா உலகங்களிலும் நிரந்தரமாகத் திகழ்ந்து, மாற்றங்களுக்குப் புறம்பாக இருப்பவர்; அறியாமை என்னும் இருளை ஒளியாக ஒழிக்கும் அருளாளன்; உயிர்களின் வினைப் பயன்களை துடைத்தெடுக்கும் கருணையான் — அவரே பரம தெய்வமாகிய விநாயகர். இப்படி பிரபதிபலிக்கும் திருவடிகளை முழுமனதோடு வணங்குகிறேன்.
3. இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதியை பொன் சரணம் சரணம் அடைகின்றோம்.
பொருள்: தீயில் வீழும் பஞ்சு எவ்வாறு எப்படி அழிந்து எரிகிறதோ, அதுபோல நமது எல்லா துன்பங்களையும் நீக்கி, உலக உயிர்கள் பிறவிப் பிணியிலிருந்து விடுபட்டு மோக்ஷ நிலை அடைய அருள் செய்பவரும், பாவங்களை நீக்கி நித்திய ஆனந்தம் புரியச் செய்பவருமான, நீண்ட தந்தங்களுடன் திகழும் திருமகுடம் சூடிய கணபதியின் திருவடிகளை ஆழ்ந்த பக்தியுடன் சரணடைகிறோம்
4. மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: எல்லா தெய்வங்களுக்கும் முதமையாகவும், அனைத்து தலங்களிலும் கருணையுடன் எழுந்தருளும் அருள்மூர்த்தியாகவும், கங்கை போன்ற புனித நதிகளில் அனைத்தும் நீராய் நிறைந்திருப்பவராகவும், அனைத்தையும் தெரிந்தாலும் தன்னை எளியவனாகத் திகழ்த்தும் ஞானசாகரராகவும், அனைத்து உயிர்களுக்கும் நாளும் நன்மை செய்யும் அருளாளராகவும், அறியாமையை அகற்றி சத்திய ஞானத்தை வழங்கும் கருணாகடலாகவும் விளங்கும் விநாயகப் பெருமானின் திருவடிகளை பக்தியுடன் சரண் அடைகிறேன்.
5. செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன்
அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: செயல்களாகவும், செய்யப்படும் பொருளாகவும் விளங்குபவர், எங்கு பார்த்தாலும் எதிலும் நிறைந்திருப்பவரும், நம்மால் செய்யப்படும் அனைத்துப் பணிகளின் பின் நிறைந்திருக்கும்படியான வினைப் பயனாக இருப்பவரும், அதே வினைப் பயன்களில் இருந்து நம்மை விடுவிக்கும் கருணைமிகு தெய்வமாகவும் விளங்குபவர் — அவரே முழுமுதற் கடவுள் விநாயகர். அந்த பரம்பொருளை நாம் அனைவரும் உண்மையாக வணங்கி அவரை சரணடைவோம்.
6. வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: வேதங்களின் முதலிலும், மனித அறிவால் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாத பேரருளாளனாகவும், நிகரற்ற ஞானத்தின் வடிவாகவும், குற்றமற்ற சுத்த சன்மார்க்கத் திருமேனியாகவும், வெட்ட வெளியில் ஒலிக்கும் ஓங்கார நாதமாகவும் விளங்குபவரே கணபதி. எட்டு பண்புகளால் ஆன தெய்வீக சிறப்புடன் திகழும் முழுமுதற் கடவுளாகிய விநாயகர் திருவடிகளை நாம் ஆழ்ந்த பக்தியுடன் சரணடைகிறோம்.
7. மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன்
வளியின் எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
பொருள்: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனவும், ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் இந்த வகை நீர் வகையிலும், வேள்வித் தீ, சூரியன், சந்திரன் மூன்று வகை தீயிலும், காற்றில் புயலாக கலந்து இருப்பவரும், எல்லாம் ஒன்றாய், வான் வெளியில் இருப்பவருமான விநாயக பெருமானின் திருவடிகளை சரணடைகிறோம்.
8. பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.
பொருள்: எந்த விதமான பந்தத்திற்கும் உட்படாத விலக்கானவன் அவன். பசுவாகிய ஜீவனும், பதியாகிய பரமனும் ஒரே நேரத்தில் அவனே. அறிவால் அவனை முழுமையாக உணர முடியாது, காரணம் அவன் எல்லாப் பாசங்களுக்கும் அப்பாற்பட்டவன். ஆனாலும், அவனே அனைத்துயிர்களையும் பந்தத்தில் சேர்க்கும் சக்தியும் கொண்டவன். அவர் எல்லாவற்றிலும் மேலான விநாயகனை சரணடைகிறோம்.
காரிய சித்தி மாலை பயன்கள்
விநாயகருக்கு உரிய காரிய சித்தி மாலை மந்திரத்தை யார் ஒருவர் தினமும் மூன்று முறை சொல்கிறார்களோ அவர்களின் தலைமுறையினரை காக்க கூடும். இவருக்கு ஏதேனும் பாவங்கள் வந்தால் அதனையும் நீக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |












