Kastam Theera Manthiram
பொதுவாக வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று. ஆனால் அத்தகைய கஷ்டங்கள் சிலருக்கு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இத்தகைய கஷ்டங்கள் அதிகரிக்க அதிகரிக்க கவலைகளும் அதிகரிக்க கூடும். ஆனால் இனி நீங்கள் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்களை நினைத்து கவலை பட வேண்டாம். ஏனென்றால் இன்றைய பதிவில் வாழ்க்கையில் இருக்கும் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அதனை எப்படி உடனடியாக தீர்ப்பது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதனால் பதிவை தொடர்ந்து படித்து உங்களுக்கு இருக்கும் பிரச்சனைக்கான தீர்வினை போக்கி கொள்ளலாம் வாருங்கள்..!
வீட்டில் பண மழை பொழிய வடகிழக்கு மூலையில் இதை வைத்தால் மட்டும் போதும்..
வீட்டில் கஷ்டம் தீர என்ன செய்வது:
மனிதனாக பிறந்த அனைவருக்கும் கஷ்டங்கள் என்பது இருந்து கொண்டே தான் உள்ளது. இந்த பிரச்சனையினை சரி செய்வதற்கு என்ன தான் விடாமுயற்சியினை செய்து கொண்டிருந்தாலும் கூட இதற்கான தீர்வு என்பது கிடைக்காமலே போய்விடும்.
இவ்வாறு இருக்கையில் உங்களுடைய கஷ்டங்கள் தீர நீங்கள் செய்யும் முயற்சியோடு ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ள மந்திரத்தைனையும் சேர்த்து கூறுவதன் மூலம் எவ்வளவு பெரிய பிரச்சனையும் உடனே தீர்ந்து விடும் என்று ஜோதிட சாஸ்திரத்தின்படி சொல்லப்படுகிறது.
கஷ்டங்கள் தீர மந்திரம்:
உங்களுக்கு எவ்வளவு பெரிய கஷ்டமும் உடனே நீங்கி விட வேண்டும் என்று முதலில் சிவ பெருமானை மனதில் நினைத்து வணங்கி கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஓம் அங்சிவாய என்ற மந்திரத்தை 1008 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை உங்களுக்கு எப்போதிலிருந்து பிரச்சனைகள் தொடங்கியதோ அதில் இருந்து பிரச்சனை தீரும் வரை தினமும் கூற வேண்டும்.
மேலும் இந்த மந்திரத்தை சரியான எண்ணிக்கையில் சொல்ல வேண்டும். அதேபோல் வீடு, கோவில் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் தரையில் ஒரு விரிப்பு போட்டு அமர்ந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓம் அங்சிவாய மந்திரத்தை சொல்லலாம்.
இத்தகைய மந்திரத்தை நீங்கள் கூறி கொண்டே கஷ்டங்கள் தீருவதற்கான முயற்ச்சியினையும் செய்தால் போதும் வீட்டில் இருக்கும் எவ்வளவு பெரிய கஷ்டமும் நீங்கிவிடும்.
கஷ்டங்கள் அனைத்தும் தீர… இரவு தூங்கும்போது இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |