கடன்/கஷ்டங்கள் தீர பிரதோஷ பரிகாரம்
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்களின் அனைத்து விதமான கஷ்டங்களும் தீர வேண்டுமானால் பிரதோஷம் அன்று இந்தவொரு பரிகாரத்தை செய்யுங்கள். அந்த சிவபெருமானின் அருளால் கஷ்டங்கள் அனைத்தும் தீரும். இவ்வுலகில் கஷ்டங்கள் இல்லாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. ஒவொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள், துன்பங்கள் இருக்கும். ஆனால், அந்த கஷ்டங்கள் பல வருடங்களாக தொடர்ந்து வந்தால் நம் முன்வினை பாவங்கள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது அல்லது நாம் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளும் காரணமாக இருக்கலாம்.
வீட்டில் கஷ்டங்கள் தீர பல்வேறு பரிகாரங்கள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் வாழைப்பழ பரிகாரம். எனவே, நமக்கு இருக்கும் அனைத்து விதமான கஷ்டங்களும் தீர பிரதோஷம் அன்று செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
பிரதோஷம் அன்று செய்ய வேண்டிய பரிகாரம்:
பிரதோஷம் அன்று சிவன் கோவில்களுக்கு சென்று சிவபெருமானை வழிபட வேண்டும். வீட்டிலும் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து சிவபெருமானை வழிப்பட வேண்டும். மேலும், அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிதோ அப்போதெல்லாம் சிவபெருமானின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
அடுத்து, பிரதோஷ நேரத்தில் நான்கு வாழைப்பழத்தை வாங்கி, அதனை உங்கள் உள்ளங்கையில் வைத்து கொண்டு உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று சிவபெருமானிடம் நந்தி பகவானிடம் பிராத்தனை செய்யுங்கள்.
பிரதோஷம் அன்று சொல்ல வேண்டிய நந்தி ஸ்லோகம்..!
பிராத்தனை செய்து முடித்த பிறகு, அந்த வாழைப்பழங்களை கொண்டு சென்று பசுமாட்டிற்கு உண்ண கொடுக்க வேண்டும். இவ்வாறு பிரதோஷம் அன்று மஞ்சள் வாழைப்பழத்தை பிரதோஷ நேரம் முடிவதற்குள் வழிபாடு செய்து பசுமாட்டிற்கு உணவாக கொடுத்து வந்தால் தீராத கஷ்டங்கள் இருந்தாலும் தீரும் என்பது நந்தி பகவானின் வாகு ஆகும்.
சிவன் கோவிலுக்கு தானமாக கொடுக்க வேண்டிய பொருட்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |