இந்த செடியை வீட்டு வாசலில் வையுங்க மகாலஷ்மி வீட்டுக்குள் வருவாங்க..!

katralai magimai in tamil

கற்றாழை மகிமை – Katralai Magimai in Tamil

ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம்.. நம்முடைய வீட்டில் வளர்க்கும் செடிகள் மனதிற்கு சந்தோசத்தை தரும். சில செடி கொடிகளை பார்த்தலே ஒருவித அமைதி கிடைக்கும். நாம் வளர்க்கும் செடி, கொடி, மரங்கள் எல்லாம் நமக்கு மட்டும் நன்மை அளிக்கக்கூடியவை அல்ல. பறவைகள் விலங்குகள் இவைகளுக்கும் பலனளிக்க கூடியவை. சில செடிகள் ஆன்மீக ரீதியாக பலனளிக்கக் கூடியவை. செல்வ வளத்தை தரக்கூடியவை. நம்முடைய வீட்டில் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம்.. எந்தெந்த செடிகளை வளர்க்கக் கூடாது என்று வாஸ்து ரீதியாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் நமது வீட்டு வாசலில் இந்த செடிகளை வைத்து வளர்த்தோம் என்றால் நமது வீட்டுக்குள் அன்னை மகாலஷ்மி வருவங்களாம். அது என்ன செடி எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

கற்றாழை:

பொதுவாக பலரது வீட்டு தோட்டத்திலும் சரி, வீட்டு வாசலிலும் சரி கற்றாழையை வளர்ப்பார்கள். ஏன் இந்த கற்றாழையை வீட்டு வாசலில் வளர்க்குறீர்கள் என்று கேட்டல் ஒரு சிலர் அழகிற்காக வளர்க்கிறேன் என்று சொல்வார்கள், ஒரு சிலர் திருஷ்டிக்காக வளர்க்கிறேன் என்று சொல்வார்கள். சிலர் எதற்கு கூட தெரியாமல் வளர்ப்பார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசி எது..? இந்த சுக்கிரப்பெயர்ச்சி நல்ல காலம் தான்..!

இந்த கற்றாழையை குமாரி என்ற பெயரும் உண்டு, இந்த கற்றாழையை பல வகைகளில் பயன்படுத்துகின்றோம் என்றாலும் எந்த வகையில் கற்றாழையை பயன்படுத்தினால் நமக்கு சுபிட்சம் என்று முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கற்றாழை செடி ஒரு அற்புதமான செடியாகும், தெய்வீக ஆற்றல் கொண்ட செடி என்றும் சொல்லலாம். இந்த செடியை நமது வீட்டில் வாசலின் இருபுறமும் வைத்து வளர்த்தால் ஆன்மிக ரீதியாக ஒரு நல்ல பலன்களும் கிடைக்கும்.

அதாவது கற்றாழையை உங்கள் வீட்டு வாசலின் இருபுறமும் வைத்து வளர்க்கவும், அதுவும்  பிளாஸ்டிக் குடத்திலோ அல்லது தண்ணீர் கேனிலோ வைத்து வளர்க்க கூடாது. எவ்வளவு செலவு ஆகிட போகுது இரண்டு மண் தொட்டியை வாங்கி அதில் வைத்து வளர்த்து தினமும் தண்ணீர் ஊற்றி வரவும்.

இவ்வாறு செய்து வந்தால் திருஷ்டி நீங்குவதோடு, நமது வீட்டிற்குள் அன்னை மகாலஷ்மி குடிபுகுவாள். மேலும் நமது வீட்டிற்கு இஷ்ட தேவதைகளும் வருவார்கள். ஆக உங்கள் வீட்டில் செல்வம் பெருகும், செல்வாக்கு பெருகும், அறிவு பேருக்கும், நிதிநிலை வளர்ச்சி அடையும் இது போன்று ஏராளமான நன்மைகள் நிகழும். ஆக கண்டிப்பாக உங்கள் வீட்டு வாசலில் இரண்டு பக்கமும் கற்றாழையை வைத்து வளர்க்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எந்தெந்த கிழமையில் பல்லி சத்தம் போட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்