சபரிமலை ஐயப்பனின் கட்டோட கட்டுமுடி பாடல் வரிகள்..!

Advertisement

Kattodu Kattumudi Song Lyrics in Tamil

மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே இந்த உலகில் தங்களது பலவகையான கஷ்டங்கள் மற்றும் தடைகள் ஏற்படும். அப்படி ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் தடைகளை போக்கி நாம் நமது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு நமது முயற்சிகளுடன் நமக்கு கடவுளின் ஆசிர்வாதங்களும் வேண்டும். அதனால் தான் கடவுள்களை அவர்களது மந்திரங்கள் மற்றும் போற்றிகள் போன்றவற்றை கூறி வழிபாடு செய்ய வேண்டும்.

அப்படி செய்வதன் மூலம் நமது மனமும் நிம்மதியாக இருக்கும் கடவுளின் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் சபரிமலை ஐயப்பனின் கட்டோட கட்டுமுடி பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

காக்கும் கடவுளான ஸ்வர்ணாகர்ஷண பைரவரின் ஸ்தோத்ர வரிகள்

Kattodu Kattumudi Lyrics in Tamil

Kattodu Kattumudi Lyrics in Tamil

கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
குருசாமி சொல்லுபடி குருபாதை நல்லவழி
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
எருமேலி வாசபடி விளயாட வேகபடி
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
கொட்டு முழக்கடிச்சி கோலாட்டம் போட்டபடி
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
பூதாதி பூதகனம் காவலுக்கு நின்னபடி
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
நந்தவன சாலைவழி நாதா உருவானபடி
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
சாமி அடிமேல் அடியெடுத்து அய்யா நீ சொன்னவழி
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா

தேகபலம் சுவாமி தந்திடனும் பாதபலம் சுவாமி தந்திடனும்
யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை
வில்லாளி வீரனே காக்க வேண்டும் எங்கல (2)
கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா…
கட்டும் கட்டு பள்ளிகட்டு சபரிமலைக்கு
யாரை காண சாமியை காண சாமியை கண்டால் மோட்சம் கிட்டும்

மஹிஷி விழுந்த பள்ளம் மரியாதை செய்ய சொல்லும்
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
கல்போடும் குன்று மேல மகிழ்ச்சியாக கல் எறிந்து
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
அயிலேலோ ஏத்தமுங்கோ அழுதமலை உசரமுங்கோ
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
அழுது தொழுதபடி உச்சியிலே ஏறியாடி
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
பாறையிலும் முழுபாற கோட்டயில இளைப்பாற
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
முக்குழியில் முள்ளு குத்த அக்கறையில் நீ துடிக்க
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
கட கடக்கும் காவலமாம் ஏற்றுவது உன் பலமாம்
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
சாமி கட்டகரிமலையாம் கண்ணீறு தன்மலையும்
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா

தேகபலம் சுவாமி தந்திடனும் பாதபலம் சுவாமி தந்திடனும்
யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை
வில்லாளி வீரனே காக்க வேண்டும் எங்கல (2)
சாமி கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா

இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் பாடல் வரிகள்

கரிமலயின் ஏற்றத்திலே ஐயா உன் கை பிடிச்சி
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
கரிமலயின் இறக்கத்திலே குருமிலகாய் உருண்டோடி
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
சுறுப்பா சுறுசுறுப்பா நடந்தாலே ஆனவட்டம்
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
ஆனவட்டம் தொட்டுவிட்டு பம்பைஆற்றில் பாதம்விட்டு
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
தலையாம் தலைமுழுகி பம்பையாலே புனிதமாகி
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
பம்பா விளக்கு விட்டு பசியாலே சோறும் விட்டு
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
கட்டான கட்டெடுத்து கன்னிமூலம் காய் கொடுத்து
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
சாமி இருந்தாரே நீலிமலை சபரியம்மா வாழும் மலை
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா

தேகபலம் சுவாமி தந்திடனும் பாதபலம் சுவாமி தந்திடனும்
யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை
வில்லாளி வீரனே காக்க வேண்டும் எங்கல (2)
சாமி கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா

காலு வலுவலுக்க நீலிமலை மேலிழுக்க
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
பம்பா உன் கைத்தடியாம் கன்னிசாமி தொளிருக்க
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
அப்பாச்சி மேடுவர அப்பானு மூச்சிவிட
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
இப்பாச்சி பள்ளத்துல தப்பாம மூண்டவிட்டு
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
பீடம் சபரிபீடம் தேங்காயும் ரெண்டுப்படும்
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
கொச்சி சரமும் குத்தி குடுகுடுனு ஓடிவந்து
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
சாமி படியாம் படியும் ஏற பரவசமே வந்து சேர
சபரிமலை வாரோமப்பா ஐயப்பா
அய்யா நடை திறக்க ஆனந்தமாய் நீ சிரிக்க
சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா
வந்தோமப்பா தரிசனம் கண்டோமப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா

நம்மை காக்கும் காமாட்சி அம்மனின் விருத்தம் வரிகள்

கட்டோட கட்டுமுடி பாடல் வரிகள் Pdf

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal
Advertisement