கீழ் நோக்கு நாளில் திருமணம் செய்யலாமா..?

Advertisement

கீழ் நோக்கு நாளில் திருமணம் செய்யலாமா..?

‘திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்’ என்று சொல்வார்கள். அடுத்து ஒன்று சொல்வார்கள் வீட்டை கட்டி பார் கல்யாணத்தை பண்ணிப்பார் என்று சொல்வார்கள்..! இது அனைத்துமே அவ்வளவு கடினமா என்று கேட்கலாம். ஆனால் அதனை செய்து பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அதில் எந்தளவிற்கு கஷ்டம் உள்ளது என்று.

அதனை விட முக்கியமாக சொல்வது என்றால் பணம் கொடுத்தால் அனைத்தும் செய்வதற்கு ஆள் உள்ளது என்று. ஆனால் திருணம் என்பது அவ்வளவு முக்கியமான நாள். அதனை செய்வதற்கு நாம் முதலில் பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி மணமக்களின் ஜாதகத்தை வைத்து, அவர்களுக்கு திருமண யோகம் உள்ளதா என்று தான் ஜாதகம் பார்ப்பார்கள். ஆகவே இந்த பதிவை முழுமையாக படித்து பாருங்கள்..!

கீழ் நோக்கு நாளில் திருமணம் செய்யலாமா..? 

திருமண பேச்சை எடுக்க போகிறோம் என்றால் முதலில் ஜோதிடரை பார்த்து திசை உள்ளதா, எந்த திசையில் திருமணம் செய்ய பார்க்கவேண்டும் என்று கேட்டுவிட்டு தான் பார்க்க ஆரம்பம் செய்வார்கள்.

மேலும் வளர்பிறையா? தேய்பிறையா எந்த லக்கனத்தில் திருமணம் செய்யவேண்டும். வேற எதும் தோஷம் உள்ளதா என்றும், பொருத்தம் உள்ளதா என்றும் பார்த்து பார்த்து ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நாட்களை பார்த்து தான் திருமண வரை கொண்டு சென்று அதன் பின் தான் திருமணத்தை செய்யவார்கள்.

ஆனால் இப்போது பலருக்கும் இருக்கும் கேள்வி என்னவென்றால் கீழ்நோக்கு நாளில் திருமணம் செய்யலாமா என்பது தான். முதலில் கீழ்நோக்கு நாள் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்..?

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் அம்மா வீட்டிலிருந்து இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட எடுத்துட்டு போகவே கூடாதாம்..

 கீழ் நோக்கு நாள் என்பது பண்டைய தமிழர்கள் நம் வாழ்வியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. நிலநடுக்கோட்டிலிருந்து ஞாயிற்றின் இருப்பிடத்தையும் புவியை சுற்றி வரும் நிலவின் நிலையையும் அடிப்படியாக கொண்டு மேல் நோக்கு அல்லது கீழ் நோக்கு நாள் என்று வகைப்படுத்தப்பட்டது.    திருமணத்திற்கு ஏற்ற திதி, நட்சத்திரம், மற்றும் லக்னம் சுபமாக இருப்பின் தாராளமாக இருப்பின் கீழ் நோக்கு நாளில் திருமணம் செய்யலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை.  

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  வீட்டில் இருப்பவர்கள் ஒரே ராசியாக இருக்கலாமா?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement